ஜூலை 25 உறுதி.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது HMD நிறுவனத்தின் முதல் போன்.. எந்த மாடல்?
நோக்கியா (Nokia) போன்களை அறிமுகம் செய்துவந்த எச்எம்டி நிறுவனம் இனிமேல் எச்எம்டி (HMD) பெயரில் ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி இந்நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் எச்எம்டி ஏரோவ் (HMD Arrow) எனும் போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் எச்எம்டி ஏரோவ் போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வரும் ஜூலை 25 ஆம்-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன டூயல் ரியர்கேமரா எல்சிடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் 5ஜி ஆதரவுடன் எச்எம்டி ஏரோவ் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எச்எம்டி ஏரோவ் அம்சங்கள் (HMD Arrow Specifications): 6.65-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டோ-கோர் 12என்எம் யுனிசாக் டி750 (Unisoc T750 5G) சிப்செட் வசதியுடன் இந்த எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் இந்த புதிய எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி நிறுவனம்.
எச்எம்டி ஏரோவ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சிறந்த கேமரா வசதி, மேம்படுத்தப்பட்ட சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய எச்எம்டி போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








