நோக்கியா அசத்தல் : பழைய மாடல்களில் புதிய நோக்கியா கருவிகள்.!

Written By:

அடுத்தது என்ன நோக்கியா கருவி வெளியாகும் என்று தீவிரமாக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நேரமிது. குறிப்பாக, இந்த மாத இறுதியில் நடைபெறும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வு நெருங்கிக்கொண்டே வருகிற்னற நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கான்செப்ட் மற்றும் லீக்ஸ் தகவல்கள் என்ற ட்ரெண்டிங்கில் மூழ்கி திளைக்கிறது - நோக்கியா பிராண்ட்.!

இந்த பரபரப்பான நிலையில் நோக்கியா பிராண்ட் கருவிகளின் தற்போதைய உரிமையாளரான எச்எம்டி க்ளோபல் செய்துள்ள வேலை - சிலரை கடுப்பேற்றும் அதே சமயம் சிலரை "வாவ் ஐ யம் வெயிட்டிங்" என்றும் கூற வைக்கிறது. அப்படி என்ன 'வேலை பார்த்ததோ' எச்எம்டி க்ளோபல் நிறுவனம்.?!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ட்ரேட்மார்க் பதிவு

ட்ரேட்மார்க் பதிவு

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியாவின் க்ளாஸிக் கருவிகளான, அதாவது அந்த காலத்து கருவிகளான நோக்கியா 'என்' வரிசை கருவிகளுக்கான ட்ரேட்மார்க்கை பதிவு செய்துள்ளது.

நோக்கியா என் தொடர் ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா என் தொடர் ஸ்மார்ட்போன்கள்

இது சார்ந்த தகவலானது சீனாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக மாநில நிர்வாக வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் சில புதிய நோக்கியா என் தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லூமியா கருவிகளுக்கு முன்

லூமியா கருவிகளுக்கு முன்

நோக்கியாவின் 'என்' தொடர் கருவிகளானது லூமியா கருவிகளுக்கு முன் வந்த ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் அவைகள் சிம்பியன் மொபைல் இயக்க அமைப்பு மூலம் இயக்கப்பட்டு அதன் சொந்த சிறப்பு மல்டிமீடியா திறன்கள் கொண்டு வெளியானது.

அம்சங்கள் மீது நோக்கியா கவனம்

அம்சங்கள் மீது நோக்கியா கவனம்

இந்த என் தொடர் ஸ்மார்ட்போன்கள் சற்று தடினமான கருவிகளாக இருந்தன. ஆனாலும் கேமரா, இசை அல்லது இணைய உலாவுதல் போன்ற குறிப்பிட்ட அம்சங்கள் மீது நோக்கியா கவனம் செலுத்தியிருந்தது.

விண்டோஸ் இயங்குதளம்

விண்டோஸ் இயங்குதளம்

2005-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனங்களை தொடர்ந்து விரைவில் லூமியா தொடர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் கொண்டு மாற்றப்பட்டன.

என்95

என்95

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி எச்எம்டி, நோக்கியாவின் அதன் புதிய மாடல்களை மேலே கொண்டு செல்ல பழைய மாடல்களின் பெயரிடுதல் மரபை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. உடன் என் தொடரின் ஒரு கருவியான என்95 மாடல் தான் இந்த மரபை தொடங்கி வைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லைடர் மாதிரி கருவி

ஸ்லைடர் மாதிரி கருவி

பழைய என்95 கருவியானது கேமரா, இசை மற்றும் வீடியோ திறன்கள் மீது கவனம் செலுத்தியது மற்றும் அக்கருவி ஒரு மல்டிமீடியா ஸ்மார்ட்போனாக இருந்தது. என்95 ஒரு திறக்கப்படும் ஸ்லைடர் மாதிரி கருவியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமான கேள்வி

சுவாரசியமான கேள்வி

அப்போது என்95 கருவியில் இருந்த அம்சங்கள் அனைத்தும் இன்று பொதுவான ஒரு அம்சமாகிவிட்ட நிலையில் ஆண்ட்ராய்டு கொண்டு மீண்டும் அக்கருவி எப்படி உருவாக்குபப்டும் என்பதே இங்கே மிக சுவாரசியமான கேள்வியாகும்.

எம்டபுள்யூசி 2017

எம்டபுள்யூசி 2017

சில தகவல்களின்படி பார்சிலோனாவில் நடக்கும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் சில புதிய வெளியீடுகளுடன் இணைந்து இந்த என்95 சாதனமும் அறிவிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

600 தொடர் சிப்செட்

600 தொடர் சிப்செட்

அப்படி வெளியானால் இந்த ஸ்மார்ட்போன் ஒரு க்வால்காம் ஸ்னாபடிராகன் 600 தொடர் சிப்செட் கொண்டு வெளியாகும் மற்றும் ஒரு மிட்-ரேன்ஜ கருவியாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
HMD files for Nokia N series trademark; first smartphone likely to be called N95. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot