HMD சைலன்ட்டாக செய்த வேலை.. ரூ.15,000 விலையில் லேட்டஸ்ட் 5G Mobile.. எந்த மாடல்? என்ன சிறப்பு?
யாருமே எதிர்பார்த்திடாத நேரத்தில் எச்எம்டி குளோபல் நிறுவனம் (HMD Global) நிறுவனம் புதிதாக ஒரு பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (budget segment smartphone) சாதனத்தை சத்தமே இல்லாமல் மலேஷியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 15,000 விலைக்குள் ஒரு டீசெண்டான பவர்புல் ஸ்மார்ட்போனை எதிர்பார்த்திருந்த காத்திருந்த அனைவரையும் வியப்படைய வைக்கும் விதத்தில் HMD நிறுவனம் புதிய போனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலின் பெயர் என்ன? இதன் சிறப்பு விலை என்ன? இந்த போனில் இருக்கும் அம்சங்கள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை இப்போது பார்க்கலாம்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் மலேஷியா ஸ்மார்ட்போன் சந்தையில் இன்று புதிதாக எச்எம்டி கிரெஸ்ட் (HMD Crest) என்ற ஸ்மார்ட்போன் மாடலை சத்தம் இல்லாமல் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எச்எம்டி கிரெஸ்ட் (HMD Crest) ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். அனைவரும் வாங்க கூடிய மலிவு விலை விருப்பத்தின் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாதனம் தான் இந்த எச்எம்டி கிரெஸ்ட் (HMD Crest) ஸ்மார்ட்போன்.

HMD சைலன்ட்டாக செய்த வேலை.. ரூ.15,000 விலையில் லேட்டஸ்ட் 5G Mobile:
எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் HMD நிறுவனம் கடந்த வருடம் எச்எம்டி மேக்ஸ் (HMD Max) ஸ்மார்ட்போனுடன் உலக சந்தையில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய HMD Crest ஸ்மார்ட்போன் சாதனம், 6.67" இன்ச் அளவு கொண்ட 1080p OLED டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளே மிகவும் துல்லியமான வீடியோ அனுபவத்தை பயனருக்கு வழங்குகிறது. இந்த திட்டம் யுனிஸாக் T760 சிப்செட் (Unisoc T760 chipset) உடன் இயங்குகிறது. இது பட்ஜெட் செக்மென்ட்டில் பவர்புல் சிப்செட்டாக பார்க்கப்படுகிறது. இந்த HMD Crest ஸ்மார்ட்போன் சாதனம் 8GB ரேம் (RAM) உடன் 256GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெறுகிறது.
எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G):
இந்த ஸ்மார்ட்போனில் HMD நிறுவனம் 50MP ஆதரவு கொண்ட மெயின் கேமராவுடன் டெப்த் சென்சாரை (depth sensor) வழங்கியுள்ளது. HMD Crest ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் கேமரா (dual camera) அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் முன்பக்கத்தில் 50MP செல்பி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் 5000mAh பேட்டரி (battery) உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவை பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் 5ஜி (5G) இணக்கம், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வைஃபை 5 (Wi-Fi 5) மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற அம்சங்கள் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த எச்எம்டி கிரெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் 2 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது மிக மிக குறைந்த விலையில் மலேஷியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி விலை (HMD Crest 5G Price):
மலேஷியா மதிப்பின் படி, இந்த HMD Crest ஸ்மார்ட்போன் சாதனம் RM 799 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 15,000 ஆகும். தற்போது அறிமுக விற்பனையின் சிறப்பு தள்ளுபடி விலையாக, இந்த போன் தற்போது வெறும் ரூ. 13,000 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் இந்த சாதனம் தற்போது 3 நிறங்களில் HMD தளம், Amazon மற்றும் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








