Home
Mobile

HMD Crest, HMD Crest Max 5G அறிமுகம்.. என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை?

நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, தனது முதல் செல்ஃப் பிராண்டட் (Self branded) ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G) மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

முக்கிய அம்சங்கள்: எச்எம்டி க்ரெஸ்ட் சீரிஸின் கீழ் வெளியாகியுள்ள இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) பேக் செய்கின்றன மற்றும் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே யுனிசாக் டி760 5ஜி சிப்செட் (Unisoc T760 5G chipset) மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன மற்றும் ஈஸி செல்ஃப் ரிப்பேர் அம்சங்களுடன் (easy self-repair features) வருகின்றன.

HMD Crest, HMD Crest Max 5G அறிமுகம்.. என்னென்ன அம்சங்கள்?

இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டிருந்தாலும் ரியர் கேமரா செட்டப்பில் வேறுபடுகின்றன எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, அதே நேரத்தில் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கிறது.

விரிவான அம்சங்கள்: எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகின்றன. இரண்டிலுமே 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.

எச்எம்டி க்ரெஸ்ட் மாடல் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் எச்எம்டி க்ரெஸ்ட் ஆனது 6ஜிபி விர்ச்சுவல் ரேமை வழங்குகிறது, எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் ஆனது 8ஜிபி மெய்நிகர் ரேமை வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ-ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரி யூனிட்கள் 800 சார்ஜிங் சுழற்சிகளை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது ரிப்பேரபிலிட்டி 1.0 அம்சத்தை வழங்குகின்றன, இது பயனர்களை - பேக் பேனல், பேட்டரி, சார்ஜிங் போர்ட் மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றை விரைவாக மாற்ற உதவுகிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது ரூ.12,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைக்கும். இதேபோல எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.16,999 ஆகும். இருப்பினும் இது ரூ.14,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் ப்ளூ, லஷ் லிலாக் மற்றும் ராயல் பிங்க் வண்ணங்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அக்வா கிரீன், டீப் பர்பில் மற்றும் ராயல் பிங்க் ஃபினிஷ்களில் வதங்க கிடைக்கிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையின் விற்பனைக்கு வரும் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. (Photo Courtesy: HMD India X page / @HMDdevicesIN)

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Crest and HMD Crest Max 5G Smartphones Price in India Full Specifications Amazon Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X