Home
Mobile

அடிதூள்.. ரூ.10,999 பட்ஜெட்ல 50எம்பி செல்பி கேமரா.. 33W சார்ஜிங்;.. ஆஃபரில் HMD போன்.. எந்த மாடல்?

எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி (hmd Crest 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 50எம்பி செல்பி கேமரா, யுனிசாக் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அடிதூள்.. ரூ.10,999 பட்ஜெட்ல 50எம்பி  செல்பி கேமரா.. ஆஃபரில் HMD போன்!

எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி அம்சங்கள் (HMD Crest 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே (OLED display) உடன் வெளிவந்துள்ளது எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன.

யுனிசாக் டி760 5ஜி ஆக்டா-கோர் 6என்எம்சிப்செட் (Unisoc T760 5G octa core 6 nm) கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி வெளிவந்துள்ளது ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), யுஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், குளோனாஸ் (GLONASS)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி போனில் உள்ளன.

33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000mAh பேட்டரி உடன் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக 50எம்பி செல்பி கேமரா, 6ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
hmd Crest 5G with 6GB RAM available at discounted price on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X