Home
Mobile

HMD களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்? என்ன விலை?

எச்எம்டி நிறுவனம் எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ (HMD Crest 2 Pro) ஸ்மார்ட்போனை ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ அம்சங்கள் (HMD Crest 2 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட்
(Qualcomm's Snapdragon 4 Gen 4 chipset) உடன் புதிய எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

HMD களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED display) உடன் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குறிப்பாக 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி auxiliary கேமரா என்கிற ட்ரிபிளர் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதியுடன் இந்த எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது.

எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய எச்எம்டி போனில் உள்ளது.

எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6000mAh பேட்டரி உடன் எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்த புதிய எச்எம்டி கிரெஸ்ட் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.16,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Image Credit: X/ @smashx_60


Article Corrections

Image Credit: X/ @smashx_60

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Crest 2 Pro launch Timeline, Price, specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X