Home
Mobile

HMD களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய எச்எம்டி சி2பி (HMD C2P) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

எச்எம்டி சி2பி அம்சங்கள் (HMD C2P Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி சி2பி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

HMD களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப் (Snapdragon 4 Gen 4 chip) உடன் எச்எம்டி சி2பி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

64எம்பி ரியர் கேமரா உடன் எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் உடன் எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)வசதியும் இந்த புதிய எச்எம்டி ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். அதேபோல் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

HMD களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்?

6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது புதிய எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரல், ராயல் ப்ளூ,மற்றும் ஜேட் கிரீன் நிறங்களில் இந்த புதிய எச்எம்டி சி2பி ஸ்மார்ட்போன் வெளியாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த எச்எம்டி சி2பி பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credits: gizmochina, smashx_60, HMD_MEME'S,

Best Mobiles in India

English summary
HMD C2P images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X