மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது நோக்கியா2010.!
நோக்கியா 2010 என்ற மாடலின் புதிய வடிவம் நோக்கியாவின் 25வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனத்தின் மாடல்களை விற்பனை செய்யும் HMD நிறுவனம் அவ்வப்போது அந்த நிறுவனத்தின் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த நிறுவனம் நோக்கியாவின் பல மாடல்களை MWC2017 என்ற சீரியஸில் வெளியிட்டது.

இந்த நிலையில் அதேபோல் இந்த வருடமும் MWC2018 என்ற சீரியஸில் ஐந்து புதிய மாடல்களை வெள்யிட திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு வருடங்களிலும் HMD வெளியிடும் மாடல்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டு நோக்கியா 3310 மாடல் வெளியானது போல் இந்த ஆண்டு நோக்கியா 8110 மாடல் வெளியானது. அப்படியென்றால் அடுத்தது என்ன என்று ஊகியுங்கள். ஆம், நோக்கியாவின் மிகச்சிறந்த மாடல்களில் ஒன்றான கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த நோக்கியா 2010 மாடலின் புத்தம் புது பொலிவு வடிவில் விரைவில் ஆண்ட்ராய்டு வடிவில் வெளியாகவுள்ளது.
நோக்கியா 2010 என்ற மாடலின் புதிய வடிவம் நோக்கியாவின் 25வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே MWC 2019 மாடலாக இந்த போன் வெளிவரலாம்.

இந்த மாடலில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த மாடலில் 4ஜி, எல்.டி.இ கனெக்டிவிட்டி, கலர் ஸ்க்ரீன் ஆகியவையுடன் வெளிவரவுள்ளது. மேலும் இந்த மாடல் நோக்கியாவின் கிளாஸிக் மாடலில் உள்ள அதே ஓஎஸ் உடன் வெளிவரவுள்ளது. மேலும் இந்த மாடல் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் சப்போர்ட் செய்யும் அளவில் உருவாக்கப்படுவதாகவும், இதற்காக HMD நிறுவனம் ஃபேஸ்புக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த போன் அதே பழைய மாடலில் மேலே உள்ள படத்தில் தோன்றுவது போல்தான் வெளிவரும் என்றாலும் ஒருசில மாற்றங்கள் மட்டும் டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய மாடலுக்கு ஏ10 என்ற பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த மாடல் சிகப்பு, மஞ்சள், கருப்பு உள்பட மொத்தம் ஏழு வண்ணங்களில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications








