அதிருது இந்திய மார்க்கெட்.. ரூ.10,000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 256ஜிபி மெமரி.. புது HMD போன் ரெடி.. எந்த மாடல்?
எச்எம்டி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் எச்எம்டி போல்டு (HMD Bold) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
எச்எம்டி போல்டு அம்சங்கள் (HMD Bold specifications): 6.74-இன்ச் எச் பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

யுனிசாக் டி7200 எஸ்ஒபிசி (Bold UNISOC T7200 SopC) சிப்செட் உடன் எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த எச்எம்டி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதியும் இந்த எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும்.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி நிறுவனம்.
ப்ளூ (Blue) மற்றும் பிரவுன் (Brown) நிறங்களில் எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய எச்டிஎம் போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியாகும் தகவலின்படி, ரூ.10,000 பட்ஜெட்டில் எச்எம்டி போல்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








