Home
Mobile

NOKIA கூட இதை பண்ணலயே.. 4G, டபுள் டிஸ்பிளே, 32GB மெமரி ,1450mAh பேட்டரி.. HMD-யின் Barbie Phone.. என்ன விலை?

நோக்கியா (NOKIA) பிராண்டட் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, தனது லேட்டஸ்ட் செல்ஃப் பிராண்டட் ஸ்மார்ட்போன்களான எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G) மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு, அதன் சொந்த பிராண்டிங்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தின் கீழ் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று எச்எம்டி பார்பி போன் (HMD Barbie phone) என்கிற பிளிப் போனை உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தப்பட்ட எச்எம்டி பார்பி போன் ஆனது, ஒரு கிளாசிக் ஃபீச்சர் ஃபிளிப் போனாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்த்தது. மேலோட்டமாக பார்ப்பதற்கு பொம்மை மொபைல் போனை போலவே இருக்கும் எச்எம்டி பார்பி போன் ஆனது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

HMD-யின் Barbie Phone.. என்ன விலை?

எச்எம்டி பார்பி போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது 240 x 320 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 2.8 இன்ச் TFT டிஸ்பிளே + 128 x 160 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 1.77 இன்ச் டிஸ்பிலேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிங்கிள்-கோர் எஸ்ஓசி-ல் 1.05 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பீடில் இயங்கும்.

இதில் வெறும் 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மட்டுமே இடம்பெறலாம், அதாவது இது பேஸிக் வாய்ஸ் கால் மற்றும் மெசேஜிங் தவிர்த்து வேறு எந்த பெரிய வேலையையும் செய்ய வாய்ப்பில்லை. கூடுதலாகா இது மைக்ரோ-எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32ஜிபி மெமரி விரிவாக்கத்தையும் ஆதரிக்கலாம் .

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது 4G LTE உடன் வரலாம். இது 1450mAh பேட்டரி மூலம் இயக்கப்படலாம். கேமராவை பொறுத்தவரை , LED ஃபிளாஷ் உடனான சிங்கிள் ரியர் கேமராவை பேக் செய்யலாம். ஆச்சரியப்படத்தக்க வகையில், இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் பார்பி அழகியலை பின்பற்றுகிறது. இந்த போன் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது; கூடவே ஒரு பெரிய பார்பி லோகோவையும் காண முடிகிறது. இதன் எடை சுமார் 123 கிராம் இருக்கலாம்.

விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. பெரும்பாலும் இது ஒரு மலிவு விலை மொபைல் போனாகவே இருக்கும். அதன்படி பார்த்தால், இது ரூ.3,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

முன்னதாக அறிமுகமான் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை: எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது ரூ.12,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.16,999 ஆகும். இருப்பினும் இது ரூ.14,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் சீரிஸின் கீழ் வெளியாகியுள்ள இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) பேக் செய்கின்றன மற்றும் 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே யுனிசாக் டி760 5ஜி சிப்செட் (Unisoc T760 5G chipset) மூலம் இயக்கப்படுகின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன மற்றும் ஈஸி செல்ஃப் ரிப்பேர் அம்சங்களுடன் (easy self-repair features) வருகின்றன.

இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ கேமராக்களை கொண்டிருந்தாலும் ரியர் கேமரா செட்டப்பில் வேறுபடுகின்றன எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, அதே நேரத்தில் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கிறது. Photo Courtesy: www.tenaa.com.cn

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Barbie Phone with Flip Design Global launch date August 28 Check out Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X