ஆளுக்கு 2 ஆர்டர்.. அடிமட்ட ரேட்ல 4G போன்.. 2 டிஸ்பிளே.. 64MB ரேம்.. 1450mAh பேட்டரி.. VGA கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பீச்சர் போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படி அடிமட்ட பட்ஜெட்டில் 4ஜி சிம் கார்டு கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், இன்னர் மற்றும் அவுட்டர் டிஸ்பிளே, 64 எம்பி ரேம், 1450mAh பேட்டரி, விஜிஏ கேமரா போன்ற பீச்சர்களுடன் எச்எம்டி பார்பி போன் (HMD Barbie Phone) களமிறங்கி இருக்கிறது. இந்த பீச்சர் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மூலம் ஏற்படும் நேர விரயத்தை குறைக்க பலர் பீச்சர்கள் போன்களை வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் வீட்டில் இருக்கும் டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு பீச்சர் போன்களை வாங்கி கொடுக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்றபடியான பட்ஜெட்டில் எச்எம்டி பார்பி போன் இருக்கிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பிடித்த டிசைனில் இந்த போன் வெளியாகி இருக்கிறது.

எச்எம்டி பார்பி போன் அம்சங்கள் (HMD Barbie Phone Specifications): இந்த பார்பி போன் அதன் பெயருக்கு ஏற்ப பிங்க் கலரில் மட்டுமே கிடைக்கிறது. ஃபிளிப் டிசைனில் 2 டிஸ்பிளேக்களை கொண்டிருக்கிறது. இன்னரில் மெயின் டிஸ்பிளேவும், அவுட்டரில் நோட்டிபிகேஷன்கள் பார்த்து கொள்ளும்படி செகண்டரி டிஸ்பிளேவும் கிடைக்கிறது.
ஆகவே, ஃபிளிப் செய்யப்பட்ட பிறகும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களின் நேட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். இந்த போனில் 2.8 இன்ச் கியூவிஜிஏ (QVGA) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. அதேபோல அவுட்டரில் 1.77 இன்ச் கியூகியூவிஜிஏ (QQVGA) செகண்டரி டிஸ்பிளே கிடைக்கிறது. எஸ்30 பிளஸ் ஓஎஸ் (S30+ OS) மற்றும் யுனிசோக் டி107 (Unisoc T107) சிப்செட் கிடைக்கிறது.
இந்த எச்எம்டி பார்பி போன் மாடலில் 64 எம்பி ரேம் மற்றும் 128 எம்பி மெமரி கிடைக்கிறது. இருப்பினும், 32 ஜிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கிறது. இந்த டூயல் சிம் கார்டில் 4ஜி கனெக்டிவிட்டி (4G Connectivity) கிடைக்கிறது.

0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா + ஃபிளாஷ் லைட் (Flash Light) கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) கிடைக்கிறது. இந்த எச்எம்டி போனில் 1450mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே 9 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்.
பீச்சர்கள் போன்களில் வழக்கமாக கிடைக்கும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack), எம்பி3 பிளேயர் (MP3 Player) மற்றும் எப்எம் ரேடியோ (FM Radio) கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி இருக்கிறது. அதேபோல எல்டிஇ (LTE) மட்டுமல்லாமல், ஜிஎஸ்எம் (GSM), டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) கிடைக்கிறது.
மேலும், ஜிபிஆர்எஸ் (GPRS) சப்போர்ட் கிடைக்கிறது. ஒரு ஸ்பீக்கர் மற்றும் ஒரு மைக்ரோபோன் பேக் செய்துள்ளது. டிஜிட்டல் பேலன்ஸ் டிப்ஸ் (Digital Balance Tips), பார்பி மெடிடேஷன் (Barbie Meditation) போன்ற பார்பி போன் ஆப்கள் கிடைக்கின்றன, ஸ்நேக் போன்ற கிளாசிக் கேம்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த எச்எம்டி பார்பி போன் மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. எச்எம்டி தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விற்பனை தொடங்க இருக்கிறது. நோக்கியா போனில் கிடைக்கும் குவாலிட்டி இந்த போனில் எதிர்பார்க்கலாம் என்பதால், பீச்சர்கள் மட்டுமல்லாமல் குவாலிட்டியும் பக்காவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








