Home
Mobile

மார்கெட் காலி.. வெறும் ரூ.10,825 போதும்.. 1450mAh பேட்டரி.. 32GB மெமரி.. VGA கேமரா.. எந்த மாடல்?

ஃபிளிப் போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், கிளாசிக் டிசைன் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி அடிமட்ட பட்ஜெட்டில் எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் (HMD Barbie Flip Phone) களமிறங்கி இருக்கிறது. டூயல் சிம், 1450mAh பேட்டரி, விஜிஏ கேமரா, 32 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களில் மிரள விடுகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியா ஆப்களை இந்த போனில் பயன்படுத்த முடியாது. டிஜிட்டல் டிஸ்ட்ராக்சன் கன்ட்ரோலுக்காக இந்த எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் மாடலை தாராளமாக வாங்கி கொள்ளலாம்.

ஃபிளிப், போல்ட் மாடல்களுக்கு அடுத்தபடியாக ரோலபிள் மாடல்களுக்கு ஸ்மார்ட்போன் மார்கெட் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், ரெட்ரோ டிசைன் மற்றும் பீச்சர்களை கொண்ட கிளாசிக் போன்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. இதனாலேயே, பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியா ஆப்கள் இல்லாமல் பீச்சர் போன்கள் வெளியாகி வருகின்றன.

மார்கெட் காலி.. வெறும் ரூ.10825 போதும்.. 1450mAh பேட்டரி.. 32GB மெமரி!

இந்தியாவிலும் நோக்கியா 2660 ஃபிளிப் (Nokia 2660 Flip) போன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த போனுக்கு நிகராக எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் டிசைனில் கம்மியான பட்ஜெட் கொண்டிருப்பதால், இந்திய பீச்சர் போன் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்திருக்கிறது.

எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் அம்சங்கள் (HMD Barbie Flip Phone Specifications): இந்த பார்பி போனில் 2.8 இன்ச் கியூவிஜிஏ (QVGA) மெயின் டிஸ்பிளே வருகிறது. 1.77 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே வருகிறது. இந்த அவுட்டர் டிஸ்பிளே மூலம் போன் ஃபிளிப் செய்யப்பட்டிருக்கும்போது, மேசேஜ், காலிங் போன்ற நேட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். எஸ்30பிளஸ் ஓஸ் (S30+​ OS) வருகிறது.

பட்ஜெட் மாடல்களில் வரும் யுனிசோக் டி107 (Unisoc T107) சிப்செட் வருகிறது. எச்எம்டி பார்பி ஃபிளிப் போனில் 64 ஜிபி ரேம் மற்றும் 128 எம்பி மெமரி வருகிறது. இதுபோக 32 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இப்போது, மார்கெட்டில் கிடைக்கும் லேட்டஸ்ட் போன்களில் வருவதை போலவே டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது.

மார்கெட் காலி.. வெறும் ரூ.10825 போதும்.. 1450mAh பேட்டரி.. 32GB மெமரி!

எல்இடி ஃபிளாஷ் (LED Flash) கொண்ட விஜிஏ (VGA) ரியல் கேமரா வருகிறது. சோஷியல் மீடியா ஆப்களை எதிர்பார்க்க முடியாது. எம்பி3 பிளேயர் (MP3 Player) மற்றும் எப்எம் ரோடியோ (FM Radio) வருகிறது. 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) உள்ளது. இந்த எச்எம்டி பார்பி ஃபிளிப் போனில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி மட்டுமே வருகிறது.

சிம் கார்டு கனெக்டிவிட்டியை பார்க்கையில், ஜிஎஸ்எம் (GSM), டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) மற்றும் எல்டிஇ (LTE) வருகிறது. பழைய சார்ஜிங் போர்ட் மாறி இருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C) வருகிறது. 1450mAh ரிமூவபிள் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 123.5 கிராம் எடை வருகிறது. பிளிப் செய்யப்பட்டிருக்கும் போது 18.9 மிமீ தடிமன் வருகிறது.

இதுவொரு பார்பி டோல் பதிப்பு மாடலாகும். ஆகவே, பிங்க் கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதேபோல பார்பி ஸ்டிக்கர்கள், பேக் கேஸ் போன்ற ஆக்சஸரீகளுடன் கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. யுகேவில் ரூ.11,008 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. அங்கு விற்பனையும் தொடங்கி இருக்கிறது.

அதேபோல யுஎஸ் மார்கெட்டில் ரூ.10,825 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவிலும் வெளியாக வாய்ப்புள்ளது. நோக்கியா 2660 ஃபிளிப் போனுக்கு மாற்றாக இந்த போன் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Barbie Flip Phone With Retro Type 64MB RAM 1450mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X