Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. புதிய flip போனை களமிறக்கும் HMD.. மலிவு விலை.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

எச்எம்டி நிறுவனம் பார்பி ஃபிளிப் போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது நோக்கியா போன்களை அறிமுகம் செய்து வந்த எச்எம்டி நிறுவனம் தற்போது எச்எம்டி பெயரில் போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் மாடலை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி நிறுவனம்.

குறிப்பாக எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் ஆனது எலிமெண்ட்ஸ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. அதுவும் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த எச்எம்டி பார்பி ஃபிளிப் போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர்... புதிய flip போனை களமிறக்கும் HMD.. எந்த மாடல்?

எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் அம்சங்கள் (HMD Barbie flip phone Specifications): TA-1681 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது இந்த எச்எம்டி பார்பி ஃபிளிப் போன். மேலும் இந்த போன் 5 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. 2.8-இன்ச், டிஸ்பிளே, யுனிஸாக் சிப்செட், யுபிஐ டிஜிட்டல் ஸ்கேன் ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ, 1450எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதாவது சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் நோக்கியா 2660 ஃபிளிப் மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்த எச்எம்டி பார்பி ஃபிளிப் போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிரீன் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த எச்எம்டி பார்பி பிளிப் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பார்பி ஃபிளிப் ஆனது மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூடிய விரைவில் எச்எம்டி 225 4ஜி போன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி நிறுவனம். அதாவது இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

எச்எம்டி 225 4ஜி அம்சங்கள் (HMD 225 4G Specifications): 2.2-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி 225 4ஜி மாடல். மேலும் இந்த டிஸ்பிளேவில் 400 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான யுனிஸாக் வு107 சிப்செட் (Unisoc T107 chipset) உடன் எச்எம்டி 225 4ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் சிங்கிள் ரியர் கேமரா உடன் வெளிவரும். அதாவது எல்இடி பிளாஷ் லைட் (LED flash light) ஆதரவு கொண்ட 2 மெகாபிக்சல் ரியர் கேமரா (2 megapixel rear camera) கொண்டுள்ளது இந்த போன்.

ஆளுக்கு 1 ஆர்டர்... புதிய flip போனை களமிறக்கும் HMD.. எந்த மாடல்?

குறிப்பாக போட்டோ மற்றும் HD வீடியோ இரண்டையும் ரெக்கார்ட் திறன் கொண்டது இந்த எச்எம்டி 225 4ஜி போன். மேலும் எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) போன் ஆனது 1450mAh பேட்டரியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.

பிங்க், க்ரீன் மற்றும் ப்ளூ நிறங்களில் எச்எம்டி 225 4ஜி போன் வெளியாகும். அதேபோல் FM ரேடியோ, ப்ளூடூத் 5.2 வெர்ஷன் கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன. மேலும் இந்தியாவில் எச்எம்டி 225 4ஜி போன் ஆனது ரூ.4000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Barbie flip phone launch date revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X