ரூ.9232 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. அறிமுகமானது புதிய HMD போன்.. எந்த மாடல்?
எச்எம்டி நிறுவனம் புதிய எச்எம்டி ஆரா² (HMD Aura²)ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 13எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
எச்எம்டி ஆரா² அம்சங்கள் (HMD Aura² specifications): 6.52-இனச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் எல்சிடி (IPS HD+ LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (460 nits peak brightness) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி போன். குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த யுனிசாக் எஸ்சி9863ஏ சிப்செட் (Unisoc SC9863A chipset) உடன் இந்த புதிய எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனின் வடிவைமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13எம்பி ஆட்டோ-போகஸ் (auto-focus) கேமரா உடன் இந்த எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go edition) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன். அதேபோல் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்(IP54 dust and water-resistant rating) உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் 5ஜி ஆதரவு இல்லை. அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது புதிய எச்எம்டி போன். குறிப்பாக இந்த புதிய எச்எம்டி ஆரா² போனின் எடை 185.4 கிராம் ஆகும். அதேபோல் இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஆனால் எச்எம்டி ஆரா² ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த எச்எம்டி ஆரா² போனின் விலை AUD 169 (இந்திய மதிப்பில் ரூ.9,232) ஆகும். ஷேடோ பிளாக் மற்றும் எலக்ட்ரிக் பர்பிள் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








