மார்க்கெட்டே மிரள போகுது.. 5000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. வருகிறது புதிய HMD போன்.. எந்த மாடல்?
நோக்கியா போன்களை அறிமுகம் செய்து வந்த எச்எம்டி நிறுவனம் தற்போது எச்ம்டி பெயரில் மட்டும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில் எச்எம்டி ஆரா 2 (HMD Aura 2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் ஆன்லைனில் இந்த புதிய போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் (water drop notch) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

எச்எம்டி ஆரா 2 அம்சங்கள் (HMD Aura 2 Specifications): 6.56-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த யுனிசாக் டி603 பிராசஸர் (UNISOC T603 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டுள்ளது இந்த எச்எம்டி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
13எம்பி பிரைமரி கேமரா + 08எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
IP52 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) கொண்டுள்ளது புதிய எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000mAh பேட்டரியுடன் இந்த எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய எச்எம்டி ஆரா 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய எச்எம்டி போன் இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மலிவு விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
photo credit: smashx, m.gsmarena.com, gizmochina


Click it and Unblock the Notifications