Home
Mobile

ஏழைக்கு ஏற்ற Mobile.. புது HMD Arc போனில் எல்லாமே இருக்கே.. மலிவு விலையில் 60Hz டிஸ்பிளே..5000mAh பேட்டரி..

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் சத்தமே இல்லாமல் புதிதாக எச்எம்டி ஆர்க் (HMD Arc) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. எல்லோராலும் விரும்பி வாங்க கூடிய மிகமிக குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை HMD நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுவொரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் (entry level smartphone) சாதனமாக களமிறக்கப்பட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த எச்எம்டி ஆர்க் போனின் சிறப்பம்சம் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

புதிய எச்எம்டி ஆர்க் (HMD Arc) ஸ்மார்ட்போனில் நிறுவனம் 6.52" இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை (HD+ LCD display) வழங்குகிறது. இந்த டிஸ்பிளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் டிஸ்பிளே கார்னிக் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் (corning gorilla glass protection) உறுதியான போனாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழைக்கு ஏற்ற Mobile.. புது HMD Arc போனில் எல்லாமே இருக்கே.. மலிவு விலை

ஏழைக்கு ஏற்ற பெஸ்ட் Mobile.. புது HMD Arc போனில் எல்லாமே இருக்கு தெரியுமா?
இந்த எச்எம்டி ஆர்க் (HMD Arc) போன் டியர்டிராப் நாட்ச் (teardrop notch) உடன் செல்பி கேமராவை பெரும். இந்த புதிய எச்எம்டி ஆர்க் ஸ்மார்ட்போன் டிவைஸ் யுனிஸாக் 9863A சிப்செட் (Unisoc 9863A chipset) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது 4GB ரேம் (RAM) உடன் 64GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெறுகிறது. கூடுதல் மெமரிக்கு மைக்ரோஎஸ்டி (microSD card) வழியாக எக்ஸ்பெண்டபிள் மெமரி கார்டு ஆதரவை வழங்குகிறது.

இதுவொரு என்ட்ரி லெவல் சாதனமாக இருந்தாலும், இதை HMD நிறுவனம் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனாக ஆரம்பநிலை போன் செக்மென்ட்டில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரௌசிங் (browsing), சோசியல் மீடியா (Social media), மிதமான கேமிங் (gaming) போன்றவற்றை மல்டிடாஸ்கிங் (multitasking) செய்ய அனுமதிக்கும் அம்சத்தை இந்த சாதனம் கொண்டுள்ளது.

எச்எம்டி ஆர்க் (HMD Arc):
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான இயங்குதளத்துடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர இந்த போனில் நாம் 13MP மெயின் கேமரா கொண்ட, டூயல் ரியர் கேமரா (dual rear camera) செட்டப்பை எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தில் இந்த எச்எம்டி ஆர்க் மொபைல் (HMD Arc mobile) சாதனம் 5MP கேமராவை பெறுகிறது. இந்த போன் 5000mAh பேட்டரி (battery) உடன் 10W சார்ஜிங் ஆதரவை பெறுகிறது.

எச்எம்டி ஆர்க் (HMD Arc) பாதுகாப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (finger print scanner) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP52 மற்றும் IP54 வாட்டர் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை பெறுகிறது. இந்த போன் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்டை பெரும் என்ற நம்பிக்கையை HMD வழங்கியுள்ளது. இதன் விலை ரூ.10,000 விலைக்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Arc affordable smartphone with essential features with 13MP camera and 5000mAh battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X