Subscribe to Gizbot

நோக்கியா வேட்டை ஆரம்பம் - தயாராகிக்கொள்ளுங்கள்.!

Written By:

2017 ஆம் ஆண்டின் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வு கிட்டத்தட்ட உங்களது வீட்டு வாசற்படியில் உள்ளது இந்தாண்டின் எம்டபுள்யூசி 2017 நிகழ்வு வரலாற்றில் முக்கியமான நாட்களாக பதிக்கப்படலாம் - அதற்கு காரணம் வேறெதுவாக இருக்கும் - நோக்கியா கருவிகள் தான்.!

பிப்ரவரி 26 (நாளை) தொடங்கும் இந்நிகழ்வில் நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் யூட்யூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்ய இருக்கிறது. ஆகமொத்தம் நோக்கியா படுஜோரான தயார் நிலையில் உள்ளது. நீங்கள் ரெடியா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பல யூகங்கள்

பல யூகங்கள்

சரி, முன்னோக்கி நகர்ந்து பின்லாந்தை சார்ந்த நோக்கியா நிறுவனம் இந்த எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் ஒரு பரவலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது பற்றி பல யூகங்கள் உள்ளன. குறிப்பாக நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 (உலக மாறுபாடு) மற்றும் நோக்கியா 3310 பிரீமியம் பதிப்பு என பட்டியல் நீண்டு கொண்டேப்போகிறது.

நான்கு நோக்கியா மட்டுமே அறிமுகம்

நான்கு நோக்கியா மட்டுமே அறிமுகம்

எனினும், சமீபத்திய அறிக்கைகளின்படி நோக்கியா நிறுவனம் குறிப்பிட்ட நான்கு நோக்கியா சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்யப்போவதாக கூறுகின்றன. (அட ஒன்னே ஒன்னு ரீலீஸ் செஞ்சாலும் பரவாயில்ல.. வி ஆர் ரெடி என்பதுதான் நமது மைண்ட் வாய்ஸ்.!)

மட்டுமே வெளியாகலாம்

மட்டுமே வெளியாகலாம்

வெளியாகும் என்ற சமீபத்திய அறிக்கையின் பட்டியலின் கீழ் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 (உலக மாறுபாடு) மற்றும் நோக்கியா 3310 பிரீமியம் பதிப்பு ஆகிய கருவிகள் மட்டுமே வெளியாகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நோக்கியா 8 அறிமுகம் செய்யப்படாது.

என்னவாகிற்று.?

என்னவாகிற்று.?

இதனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது - மற்ற நோக்கியா வதந்தி சாதனங்களுக்கு என்னவாகிற்று.? அதற்கு பதில் - ஒருவேளை நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 போன்ற உயர் இறுதி சாதனங்கள் பற்றிய சில விவரங்களை எச்எம்டி வெளிப்படுத்தலாம். எனினும், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ எம்டபுள்யூசி 2017 பத்திரிகையாளர் சந்திப்பபிற்கு பின்னரே நாம் எதையுமே உறுதியாக கூற முடியும். (எவ்வளவோ காலம் காத்திருந்த நாம் - இன்றைய ஒரு பொழுதை கடக்க மாட்டோமா.??)

இந்திய சந்தைக்கு.?

இந்திய சந்தைக்கு.?

உங்களுடைய அடுத்த கேள்வி என்னவென்று நாங்கள் அறிவோம் - எப்போது நோக்கியா கருவிகள் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும்.? இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி நோக்கியா சாதனங்கள் முதலில் தைவான் மற்றும் ரஷ்யா சந்தைகளை தாக்கக்கூடும் பின்னர் இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, யு.கே மற்றும் இதர நாடுகளை வந்தடையும்.

நோக்கியா 5

நோக்கியா 5

கசிவிகளின்படி நோக்கியா 5 ஒரு 5.2-அங்குல 720பி எச்டி தொடுதிரை கொண்ட மற்றும் 2ஜிபி ரேம், ஒரு 12 எம்பி முதன்மை கேமரா மற்றும் நோக்கியா 6 போன்றே ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி கொண்டிருக்கும்.

நோக்கியா 3

நோக்கியா 3

நோக்கியா 3 கருவியை பொறுத்தம்மட்டில் அதன் வன்பொருள் அம்சங்கள் வெளியாகவில்லை ஆனால் சுமார் ரூ.11,000/- என்ற விலை நிர்ணயம் பெறும் என்று பரிசீலிக்கப்பட்டுள்ளதுத்து. அடிப்படையில் பார்த்தல் நோக்கியா 5 கருவிக்கு கீழான அம்சங்கள் கொண்டிருக்கலாம்.

நோக்கியா 3310

நோக்கியா 3310

நோக்கியா 3310 சாதனம் ஆனது ஒரு பீச்சர் தொலைபேசியாக வெளிவரலாம் உடன் அதில் எந்த ஆண்ட்ராய்டு இயங்குதளமும் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல விவரங்களுக்கு, தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவிற்கு எதிராய் ஏர்டெல், ஐடியா, வோடபோனின் ஆபர்கள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
HMD to announce Nokia 3, Nokia 5, Nokia 6, & Nokia 3310 at MWC; may skip Nokia 8. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot