ஆஹா தரமான Mobile.. இந்த HMD போன் ரிலீஸ் ஆனா உடனே வாங்கிடுங்க.. இப்படி ஒரு போன் வீட்டுக்கு வீடு தேவை..
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் இந்தியாவில் மிக விரைவில் ஒரு புதிய பியூச்சர் போன் (feature phone) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இதை நிறுவனம் எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) என்ற பெயருடன் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது நோக்கியா பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 225 4ஜி (Nokia 225 4G) மாடலில் மறுபெயரிடப்பட்ட புதிய மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் மலிவு விலையில், நீண்ட நாள் நிலைக்கும் பேட்டரி மற்றும் இன்னும் பல அற்புதமான அம்சங்களுடன் அறிமுகம் செய்ய தயார்நிலையில் உள்ளது.
HMD குளோபல் நிறுவனம் இப்போது முழு வீச்சில் ஒன்றின் பின் ஒன்றாக பல மொபைல் (Mobile) போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இதில் பல புது ஸ்மார்ட்போன் மாடல்களும் பல பியூச்சர் போன் மாடல்களும் அடங்கும். இப்போது அடுத்தகட்டமாக HMD அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சாதனம் தான் இந்த எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) மாடல் பியூச்சர் போன்.

எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G):
இது, இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியாவின் மறுபெயரிடப்பட்ட புதிய மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் சில மாற்றங்களை HMD நிறுவனம் மேற்கொண்டு புதிய சாதனமாக அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) போனின் அறிமுகத்திற்கு முன்பாகவே இதன் முக்கிய சிறப்பம்ச தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்த எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) மொபைல் போன், 2.4" இன்ச் IPS LCD டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 400 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த சாதனம் யுனிஸாக் T107 சிப்செட் (Unisoc T107 chipset) மூலம் இயங்குகிறது. இந்த போனில் பின்புறத்தில் HMD நிறுவனம் ஒரு ஒற்றை கேமரா அமைப்பை (single rear camera setup) வழங்கியுள்ளது.
இதில் 2 மெகாபிக்ஸல் சென்சார் (2-megapixel rear camera) உடன் எல்இடி பிளாஷ் லைட் (LED flash light) அம்சத்தையும் வழங்கியுள்ளது. இது போட்டோ மற்றும் HD வீடியோ இரண்டையும் ரெக்கார்ட் செய்யக்கூடியது. இந்த புதிய எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) சாதனம் 1450mAh பேட்டரி உடன் USB Type-C போர்டுடன் வருகிறது. இந்த பேட்டரி மிதமான பயன்பாட்டில் 2 அல்லது 3 நாட்கள் வரை இயங்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது.
எச்எம்டி 225 4ஜி விலை என்ன? (HMD 225 4G Price):
தற்போது சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களை ஒரு நாளுக்கு இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இப்படி 3 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும் ஒரு போன் உங்கள் வீட்டில் இருந்தால், அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவையே இருக்காது. அவசரத்திற்கு இந்த போனில் இருந்து எல்லோரிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த போனில் FM ரேடியோ, ப்ளூடூத் 5.2 வெர்ஷன் கனெக்டிவிட்டி போன்ற ஆதரவும் இருக்கிறது.
எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) விலை பற்றி பேசுகையில், இதுவும் நோக்கியா 225 4ஜி (Nokia 225 4G) விலையை நெருங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது சலுகையுடன் Nokia 225 4G போன் ரூ. 2,506 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 4399 ஆகும். HMD 225 4G போன் பிங்க், க்ரீன் மற்றும் ப்ளூ நிறங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications