Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.2399 போதும்.. 30 நாட்கள் பேட்டரி.. QVGA டிஸ்பிளே.. 32GB மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் ஒட்டுமொத்த பீச்சர் போன் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) மற்றும் எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) போன்கள் களமிறங்கி இருக்கின்றன. யுபிஐ பேமெண்ட், கியூவிஜிஏ டிஸ்பிளே, 32 ஜிபி மைக்ரோஎஸ்டி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 30 நாட்கள் வரையில் பேட்டரி பேக் கொடுக்கும் இந்த எச்எம்டி மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

எச்எம்டி 150 மியூசிக் அம்சங்கள் (HMD 150 Music Specifications): இந்த போனில் கியூவிஜிஏ (QVGA) ரெசொலூஷன் கொண்ட 2.4 இன்ச் (240 x 320 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. எல்இடி ஃபிளாஷ் மற்றும் கியூவிஜிஏ ரியர் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி ரேம் + 8 எம்பி மெமரி கிடைக்கிறது. 32 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (MicroSD card) சப்போர்ட் கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.2399 போதும்.. 30 நாட்கள் பேட்டரி.. QVGA!

இந்த போனுக்கு எஸ்30பிளஸ் (S30+​) ஓஎஸ் கிடைக்கிறது. 30 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி 2500mAh பேட்டரி கிடைக்கிறது. பீச்சர் போனாக இருந்தும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த போர்டுடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. இந்த எச்எம்டி போனில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி உள்ளது. 2W ஸ்பீக்கர் கிடைக்கிறது.

வாய்ஸ் கால்களுக்காக 1 மைக்ரோன்போன் மற்றும் 1 ஸ்பீக்கர் இன்-பில்ட்டாக கிடைக்கிறது. இந்த எச்எம்டி 150 மியூசிக் போனுக்கு IP52 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டிசைனை பார்க்கையில் பர்பிள் (Purple), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் டார்க் கிரே (Dark Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 14.8 எம்எம் தடிமன் மற்றும் 83.1 கிராம் எடை இருக்கிறது.

மியூசிக் பிளே பேக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல்களுக்கு பிரத்யேக பட்டன்கள் கிடைக்கின்றன. கியூவிஜிஏ கேமரா கிடைக்கிறது. இந்த எச்எம்டி 150 மியூசிக் போனின் விலை, விற்பனை விவரங்களுக்கு முன்பாக இந்த போனுடன் வெளியான எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதுவும் பட்டையை கிளப்புகிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.2399 போதும்.. 30 நாட்கள் பேட்டரி.. QVGA!

எச்எம்டி 130 மியூசிக் அம்சங்கள் (HMD 130 Music Specifications): இந்த பீச்சர் போனிலும் 2.4 இன்ச் (240 x 320 பிக்சல்கள்) கியூவிஜிஏ டிஸ்பிளே கிடைக்கிறது. டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual LED Flash) கொடுக்கிறது. 2500mAh பேட்டரி மற்றும் 30 நாட்கள் பேக்கப் கொடுக்கிறது. டூயல் ஜிஎஸ்எம் சிம் சிலாட் கிடைக்கிறது. இந்த போனிலும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி உள்ளது.

அதேபோல டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. 8 எம்பி மெமரி மற்றும் 8 எம்பி ரேம் கிடைக்கிறது. 32 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கிறது. எஸ்30+ பிளஸ் ஓஎஸ், 2W ஸ்பீக்கரை கொடுக்கிறது. இந்த எச்எம்டி 130 மியூசிக் போனுக்கும் IP52 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், மியூசிக் கன்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமான இந்த போன்களில் விலையை இப்போது பார்க்கலாம். எச்எம்டி 130 மியூசிக் போனின் விலை ரூ.1,899ஆகவும், எச்எம்டி 150 மியூசிக் போனின் விலை ரூ.2,399ஆகவும் இருக்கிறது. எச்எம்டி தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் இந்த மாடல்களை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD 150 Music With 8MB RAM 2500mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X