999 ரூபாய்க்கு HMD 105 போன்.. கேமரா, UPI, FM அம்சத்துடன் இயங்கும் 2 Mobile-கள்.. எங்கே ஆர்டர் செய்வது?
எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக இரண்டு 2ஜி பியூச்சர் போன்களை (2G Feature Phones) மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. எச்எம்டி 105 (HMD 105) மற்றும் எச்எம்டி 110 (HMD 110) என்ற இரண்டு புதிய மொபைல் போன் (Mobile phone) மாடல்களை HMD பிராண்ட் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டில், சமீபத்தில் எச்எம்டி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இந்த பியூச்சர் போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
எச்எம்டி நிறுவனம் பற்றி தெரியாதவர்களுக்கு, நோக்கியா (Nokia) நிறுவனத்தின் உரிமையை பெற்ற தலைமை நிறுவனம் தான் HMD Global என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். நோக்கியாவின் நம்பிக்கை (Trust) மற்றும் உறுதியான தரத்தை (Strong Quality) புது பொலிவுடன், இந்த காலத்திற்கு ஏற்றார் போன்ற அம்சங்களை அதன் போனில் பேக் செய்து வழங்குவதை நோக்கமாக கொண்டு, இந்த எச்எம்டி பிராண்டு இயங்க துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்எம்டி 105 மற்றும் எச்எம்டி 110 2ஜி பியூச்சர் போன் (HMD 105 and HMD 110 2G Feature Phone):
சரி, இப்போது எச்எம்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எச்எம்டி 105 (HMD 105) மற்றும் எச்எம்டி 110 (HMD 110) ஆகிய இரண்டு போன்களை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். எச்எம்டி நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் 2ஜி பியூச்சர் போன்கள் (HMD 2G Feature Phone) இவை என்பது கவனிக்கத்தக்கது. இது மிகவும் உறுதியான முனைகளை கொண்டுள்ளது. இதன் தோற்றம் பார்ப்பவர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பியூச்சர் போன்களும் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் அம்சம் (auto call recording), எம்பி3 பிளேயர் (MP3 Player), வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ (wired and wireless FM radio) அம்சம் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. இதில் எச்எம்டி 105 மொபைல் (HMD 105 Mobile) டூயல் எல்இடி ஃபிளாஷ் (dual LED flash) உடன் வருகிறது.
எச்எம்டி 110 (HMD 110) மொபைலிலும் இதே அம்சங்கள் உடன் ரியர் கேமராவை (rear camera) கொண்டுள்ளது. இந்த காலத்திற்கு ஏற்றார் போல், இந்த போன்களில் பில்ட்-இன் யுபிஐ பேமெண்ட் சப்போர்ட் (built-in UPI Payment Support) அம்சமும் இடம்பெறுகிறது. இந்த மொபைல்கள் இன்புட் சேவைக்கு 9 லோக்கல் மொழிகளை (Language) ஆதரிக்கிறது. அதேபோல், 23 இந்திய மொழிகளில் ரெண்டரிங் சேவையை வழங்குகிறது. இது 1000mAh பேட்டரியை (Battery) பேக் செய்கிறது.
எச்எம்டி 105 மற்றும் எச்எம்டி 110 2ஜி பியூச்சர் போன் விலை (HMD 105 and HMD 110 2G Feature Phone Price):
இந்த பேட்டரி இரண்டு நாள் வரையிலான ஆயுளை வழங்குகிறது. இது ஸ்டாண்ட்பை மோடில் 18 நாள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. எச்எம்டி 105 போனின் விலை (HMD 105 Phones Price) பற்றி பேசுகையில், இது ரூ. 999 என்ற விலையுடன் பிளாக் (Black), பர்பிள் (Purple) மற்றும் ப்ளூ (Blue) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், எச்எம்டி 110 போன் விலை (HMD 110 Price) ரூ. 1199 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிளாக், கிரீன் நிறங்களில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களை இந்திய மக்கள் ரீடைல் ஸ்டோர்ஸ், ஆன்லைன் தளங்கள் மற்றும் HMD.com வழியாக இன்று முதல் வாங்கலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நீங்கள் நோக்கியா பிராண்டின் ரசிகர் என்றால், இந்த போன்களை தாராளமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








