NOKIA ஐயா நீங்களா இது.. ரூ.2000-க்கு 4G, UPI, YouTube, 32GB ஸ்டோரேஜ்.. HMD 105 4G மற்றும் HMD 110 4G அறிமுகம்!
HMD 105 4G HMD 110 4G: நோக்கியா (NOKIA) பிராண்டிங்கின் கீழ் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை தன்வசம் கொண்டுள்ள க்ளோபல் எச்எம்டி (Global HMD) நிறுவனமானது தொடர்ச்சியான முறையில் (நோக்கியா மொபைல்களை காப்பி அடித்து) தனது சொந்த பிராண்டிங்கின் கீழ் புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகமான எச்எம்டி 105 மற்றும் எச்எம்டி 110 ஃபீச்சர் போன்களின் 4ஜி வேரியண்ட்களை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி மொபைல் போன்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு மாடல்களுமே கிளவுட் போன் ஆப் (Cloud Phone App) மூலம் யூட்யூப் (YouTube), யூட்யூப் மியூசிக் (YouTube Music) மற்றும் யூட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வருகின்றன.

மேலும் இண்டர்நெட் அணுகல் இல்லாவிட்டாலும் கூட ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஆப் (Pre-loaded app) மூலம் இவ்விரு மொபைல் போன்களின் வழியாகவும் யுபிஐ பரிவர்த்தனைகளை (UPI transactions without internet access) செய்ய முடியும். அதாவது எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி மொபைல் போன்களின் வழியாக யுபிஐ சேவையின் கீழ் பணத்தை அனுப்ப மற்றும் பெற முடியும் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தவும் முடியும்.
எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி மொபைல் போன்களின் விரிவான அம்சங்கள்: இவ்விரு மொபைல் போன்களுமே 1450எம்ஏஎச் பேட்டரியை (1450mAh battery) பேக் செய்கின்றன. யூட்யூப் மற்றும் யுபிஐ ஆதரவுகளை தவிர்த்து எம்பி3 பிளேயர் (MP3 player), வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ (wireless FM radio), ஃபோன் டால்க்கர் (phone talker) மற்றும் எஸ்டி கார்டு வழியாக 32ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் (32GB SD card support) போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி ஆகிய இரண்டுமே 13 மொழிகளுக்கான இன்புட் (13 language input) மற்றும் 23 மொழிகளுக்கான ரெண்டரிங் ஆதரவையும் (23 language rendering support) கொண்டுள்ளன. வடிவமைப்பைப் பொறுத்தவரை, எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி ஆகிய இரண்டுமே "வழக்கமான" கேண்டி பார் சாட்டில் டிசைன் (Regular candy bar style design) உடன் வட்டமான எட்ஜ்ளுடன், கைகளில் வசதியாக பிடிக்கும்படி உள்ளது.
எச்எம்டி 105 4ஜி மற்றும் எச்எம்டி 110 4ஜி விலை, கலர் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை விவரங்கள்: எச்எம்டி 105 4ஜி ஃபீச்சர் போனின் விலை ரூ.2,199 என்றும், எச்எம்டி 110 4ஜி ஃபீச்சர் போனின் விலை ரூ.2,399 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எச்எம்டி 105 4ஜி மாடல் ஆனது பிளாக், சியான் மற்றும் பிங்க் ( Black, Cyan and Pink) கலர்களில் வாங்க கிடைக்கும், அதே நேரத்தில் எச்எம்டி 110 4ஜி மாடல் ஆனது டைட்டானியம் மற்றும் ப்ளூ (Titanium and Blue) கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இவ்விரு ஃபீச்சர் போன்களுமே ரீடெய்ல் ஸ்டோர்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் எச்எம்டி இணையதளம் வழியாக வாங்க கிடைக்கின்றன, எச்எம்டி நிறுவனம் இவ்விரு போன்களுக்கும் 1 வருட மாற்று உத்தரவாதத்தையும் (1-year replacement warranty) வழங்குகிறது.
ஆரம்பத்தில், நோக்கியா நிறுவனத்தின் லோகோவை புத்தம் புதிதாக மாற்றிய போது, க்ளோபல் எச்எம்டி நிறுவனமானது நோக்கியா மொபைல் போன்களின் விற்பனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நிலைமை இப்பொது அப்படியே தலைகீழாகி இனிமேல் நோக்கியா பிராண்டிங் உடன் எந்த மொபைல் போனுமே அறிமுகம் ஆகாது என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications