போட்டு தள்ளும் 1000mAh பேட்டரி.. JioPhone களுக்கு டாட்டா.. 2 புது NOKIA போன்கள் அறிமுகம்.. வெறும் ரூ.949 க்கு!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது இந்தியாவில் இரண்டு புதிய ஃபீச்சர் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அவைகள் எச்எம்டி 100 (HMD 100) மற்றும் எச்எம்டி 101 (HMD 101) மாடல்கள் ஆகும்.
இந்த இரண்டு பீச்சர் போன்களுமே - நீண்ட பேட்டரி லைஃப், எளிமையான அம்சங்கள் மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகின்றன. முக்கியமாக இவைகள் - கால்கள், மெசேஜ்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஒரு பேஸிக் போனை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளன.

எச்எம்டி 100 போனின் அம்சங்கள்: எச்எம்டி 100 மாடலானது 800mAh பேட்டரியுடன் வருகிறது. இது 7 நாட்கள் பேட்டரி லைஃப், 168 மணிநேர ஸ்டேண்ட்பை நேரம் மற்றும் 6 மணிநேர பேச்சு நேரம் வரை வழங்கும் என்று எச்எம்டி நிறுவனம் கூறுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 160×128 ரெசல்யூஷன் மற்றும் 4:5 ரேஷியோ உடனான 1.77 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது யுனிஸாக் 6533ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் எஸ்30+ ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இந்த மொபைல் போனில் 8எம்பி ரேம் மற்றும் 4எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
எச்எம்டி 100 மாடலில் உள்ள பிற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆதரவுடன் கூடிய எப்எம் ரேடியோ, ஒரு ஸ்பீக்கர், மைக்ரோஃபோன், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டு உள்ளது
மேலு இது டூயல் எல்இடி டார்ச், 10 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, ஸ்னேக் கேம், டெக்ஸ்ட்-டு-ஸ்பீச், லேன்யார்டு ஆதரவு மற்றும் சிங்கிள் சிம் அல்லது டூயல் சிம் விருப்பங்களுக்கான ஆப்ஷன்களையும் வழங்குகிறது. தினசரி பயன்பாட்டை கையாள இந்த போன் வலுவான ஃபிரேம் உடன் உருவாக்கப்பட்டுள்ளதாக எச்எம்டி கூறுகிறது.
எச்எம்டி 101 போனின் அம்சங்கள்: எச்எம்டி 100 மாடலானது சற்றே பெரிய 1000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 8.9 நாட்கள் பேட்டரி லைஃப், 213 மணிநேர ஸ்டேண்ட்பை நேரம் மற்றும் 7 மணிநேர பேச்சு நேரம் வரை வழங்கும் என்று எச்எம்டி நிறுவனம் கூறுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இதுவும் 160×128 ரெசல்யூஷன் மற்றும் 4:5 ரேஷியோ உடனான 1.77 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவும் யுனிஸாக் 6533ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் எஸ்30+ ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இந்த மொபைல் போன் 4எம்பி ரேம் மற்றும் 4எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
மேலும் இதில் பில்ட்-இன் எம்பி3 பிளேயர், 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, ஆட்டோ-கால் ரெக்கார்டிங், வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களுடன் கூடிய எப்எம் ரேடியோ, ஒரு ஸ்பீக்கர், மைக்ரோஃபோன், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியகளும் உள்ள. மேலும் இதுவும் டூயல் எல்இடி டார்ச், 10 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, ஸ்னேக் கேம், டெக்ஸ்ட்-டு-ஸ்பீச், லேன்யார்டு ஆதரவு மற்றும் வலுவான ஃபிரேமை கொண்டுள்ளது.
எச்எம்டி 100 மற்றும் எச்எம்டி 101 போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, எச்எம்டி 100 மாடலானது ரூ.949 க்கு வாங்க கிடைக்கிறது, இது கிரே, டீல் மற்றும் ரெட் ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மறுகையில் உள்ள எச்எம்டி 101 மாடலானது ரூ.1,049 க்கு வாங்க கிடைக்கிறது. இது க்ரே, ப்ளூ மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்விரு போன்களும் ஆஃப்லைன் சில்லறை கடைகள், அதிகாரப்பூர்வ எச்எம்டி வலைத்தளம் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் வாங்க கிடைக்கின்றன. இவ்விரு மாடல்களுமே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஜியோபோன் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








