செஞ்சிட்டா போச்சு.. 2024 ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் அறிமுகமாகும் Most Anticipated ஸ்மார்ட்போன்கள்!
நீங்களொரு ஸ்மார்ட்போன் ஆர்வலராக இருந்தால்.. அதாவது மார்க்கெட்டில் என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகி உள்ளது? அதில் என்ன ஸ்பெஷல்? எந்தெந்த பட்ஜெட்டில் எந்தெந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம், எதை வாங்க கூடாது? போன்ற விவரங்களில் அதிக கவனம் செலுத்துபவராக இருந்தால்.. ஒவ்வொரு வருடத்தின் பிற்பகுதியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் ஏற்கனவே நன்கு அறிந்து இருப்பீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் முன்னணி பிராண்டுகளின் தங்களை ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்.
அப்படியாக 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் என்னென்ன நிறுவனங்கள், என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்களை (New Smartphones Launching in the second half of 2024) அறிமுகம் செய்ய உள்ளன? அவைகளின் லான்ச் டைம்லைன் (Launch Timeline) என்ன? எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெறும்? இதோ விவரங்கள்:

1. ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series): 2024 செப்டம்பரில் ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 16 சீரீஸை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல ஐபோன் 16 சீரீஸிலும் 4 மாடல்கள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபோன் 16, 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபோன் 16 பிளஸ், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபோன் 16 ப்ரோ மற்றும் 6.9-இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்.
இந்த 4 மாடல்களுமே குறிப்பிடத்தக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் மேம்படுத்தல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் அனைத்துமே ஐஓஎஸ் 18 கொண்டு இயங்கலாம். ஐபோன் 16 சீரீஸில் உள்ள ப்ரோ மாடல்கள் ஆனது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence), ஆன்-டிவைஸ் அண்ட் பிரைவேட் கிளவுட் பேக்டு ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஸ்மார்ட்போன் திறன்களில் புதிய தரநிலையை அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2. கூகுள் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ (Google Pixel 9, Pixel 9 Pro): கூகுளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிக்சல் போன்களும் இந்தாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும். பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ இரண்டுமே டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து பிக்சல் 9 சீரிஸில், மேம்படுத்தப்பட்ட செயல்திறன், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் புதிய வடிவமைப்பு போன்றவைகளையும் எதிர்பார்க்கலாம்
3. சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 மற்றும் இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Flip 6, Z Fold 6): சாம்சங் அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களை 2024 ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மற்றும் ஒன்யூஐ 6.1 உடன் அனுப்பப்படும் என்றும், இது பலவிதமான கேலக்ஸி ஏஐ திறன்களை ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4. மோட்டோரோலா ரேஸர் மற்றும் ரேஸர் பிளஸ் (Motorola Razr மற்றும் Razr Plus): மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிறந்த பட்ஜெட், மிட்-டையர் மற்றும் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் முந்தைய போல்ட் போன்களுடன் ஒப்பிடும்போது மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா சிறந்த நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டை (ஐபி52) கொண்டுள்ளது.
அதேபோல 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் மோட்டோரோலா ரேஸர் மற்றும் ரேஸர் பிளஸ் ஸ்மார்ட்போன்களும் கூட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என்றும், குறிப்பாக சாம்சங்கின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களை விட மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
5. நத்திங் போன் 3 (Nothing Phone 3): நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2024 இன் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சில சுவாரஸ்யமான அம்சங்களை வழங்கும். இது ஏஐ திறன்கள், ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் உயர்மட்ட வன்பொருள் மற்றும் இன்னும் சிறந்த கேமரா செட்டப்பை கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications