பரவசத்தை ஏற்படுத்தும் கிராபிக்ஸ் போன்கள்- சிறப்பு பார்வை

By Super
|
பரவசத்தை ஏற்படுத்தும் கிராபிக்ஸ் போன்கள்- சிறப்பு பார்வை
மொபைல்போனில் வீடியோ கேம் இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டது. வீடியோ கேம்கள் விளையாடும்போது பரவசமான அனுபவத்தை கொடுக்கும் தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட அதநவீன போன்கள் சந்தையில் நிரம்பிவிட்டன. இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் மார்க்கெட்டில் வலம் வரும் போன்கள் பற்றிய சிறப்பு பார்வை.

மோட்டோரோலா டிராய்டு பயோனிக்:

இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன். இதில், 32 பிட் என்விஐசிஐஏ டெக்ரா பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது அருமையான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது. 4.3 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போன் வீடியோ ப்ளேபேக் வசதியை கொண்டது. டிராய்டு பயோனிக்கின் என்விஐடிஐஏ ஜி ஃபோர்ஸ் கிராபிக்ஸ் கன்ட்ரோலர், கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட வேலையை படுசமர்த்தாக செய்கிறது. ஹைடெபினிஷனில் வீடியோ ப்ளேபேக்கும், வீடியோ கேம் விளையாடுவதில் புதிய அனுபவத்தையும் கொடுக்கிறது.

எச்டிசி இவோ 3டி:

இது உயரிக ரக ஸ்மார்ட்போன் வர்க்கத்தை சேர்ந்தது. 4.3 இஞ்ச் எல்சிடி திரை 3டி தொழில்நுட்பத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அகன்ற திரை 3டி ஹைடெபினிஷன் ப்ளேபேக் வசதியை கொடுக்கிறது. இதில், க்யூவல்காம் அட்ரினோ 220 கிராபிக்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பேர்டு மற்றும் 5 மெகாபிக்செல் கேமரா கொண்ட இந்த போன் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக வீடியோ கேம் விளையாடும்போது பரவசத்தை ஏற்படுத்துகிறது.

எல்ஜி பி920 ஆப்டிமஸ் 3டி:

மொபைல்போன்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் எல்ஜி புரட்சியே செய்து வருகிறது. இந்த நிறுவனம் சந்தையில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல்களுக்கு உள்ள வரவேற்பை கணித்து, பி920 ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது 3டி தொழில்நுட்பம் கொண்ட பைல்களை துல்லியமான வீடியோ ப்ளேபேக்கை கொடுக்கிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், 4.3 டச் ஸ்கிரீன் இந்த போனுக்கு வலு சேர்க்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்-2:

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பை கனக்கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்-2. இதன் கிராபிக்ஸ் பிராசஸர் துல்லியமான வீடியோ ப்ளேபேக் மற்றும் ஹைடெபினிஷனில் வீடியோ ப்ளேபேக்கை கொடுக்கிறது. 4.3 டச் ஸ்கிரீன், ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் ஓஎஸ், 8 மெகாபிக்செல் கேமரா, ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை இதனை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணங்களாக அமையும். மேலும், வீடியோ கேமில் பிச்சு உதறுகிறது.

எதிர்காலத்தில் வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட போன்களாகவே வரும் என்று கூறும் அளவிற்கு மார்க்கெட்டில் கிராபிக்ஸ் போன்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X