Home
Mobile

ரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா? இதப்படிங்க முதல்ல.!

உண்மையில் ரூ70,000 மதிப்புள்ள இந்த பிக்சல்2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ16,001 உடனடி தள்ளுபடியாக வழக்கப்படுகிறது.

By Vivek Sivanandam

தற்போது சந்தைக்கு புதிதாக வந்துள்ள புதிய தலைமுறை கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகின்றீர்கள் எனில், அதை வாங்குவதற்கு இது தான் சரியான தருணம்.

'பிக் ஷாப்பிங் டேஸ் சேல்'ன் ஒரு பகுதியாக, பிக்சல்2 ஸ்மார்ட்போனுக்கு மிக அதிகமான சலுகையை வழங்குகிறது பிளாப்கார்ட். 128ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறன் கொண்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வெறும் ரூ5,999என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. அது எப்படி என்பதை இங்கே காணலாம்.

உடனடி கேஷ்பேக்

உடனடி கேஷ்பேக்

உண்மையில் ரூ70,000 மதிப்புள்ள இந்த பிக்சல்2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ16,001 உடனடி தள்ளுபடியாக வழக்கப்படுகிறது. இதனுடன் குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளுக்கு ரூ8,000 உடனடி கேஷ்பேக் தரப்படுவதால் போனின் விலை ரூ45,999 ஆக குறைகிறது. மேலும் உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்து அதை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பினால் ரூ3000 தள்ளுபடி கிடைக்கும் என்பதால் , விலை ரூ42,999 என ஆகும்.

6 முதல் 8 மாதங்களில்

6 முதல் 8 மாதங்களில்

ப்ளிப்கார்ட் நிறுவனம் போன்களுக்கு உத்திரவாத பைபேக்காக ரூ37,000 தருகிறது. இந்த சலுகையை பெற, 'பைபேக் கேரண்டி பாலிசி'(buyback guarantee policy)யை ரூ199 க்கு வாங்க வேண்டும். பின்னர் 6 முதல் 8 மாதங்களில் வேறொரு மொபைலுக்காக பிக்சல் 2-ஐ திருப்பி அளித்துக்கொள்ளலாம்.

இதே போன்ற சலுகை மிகப்பெரிய திரைகளை கொண்டிருக்கும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்.எல் போனிற்கு அளிப்பதாக கூறியுள்ளது ப்ளிப்கார்ட் .

கூகுள் பிக்சல் 2 - சிறப்பம்சங்கள்

கூகுள் பிக்சல் 2 - சிறப்பம்சங்கள்

கூகுள் பிக்சல் 2 போனை பொறுத்தவரை, 1080x1920p ரெசல்யூசனை கொண்ட 5 இன்ச் முழு எச்.டி திரையுடன் வெளிவருகிறது. இந்த திரையானது AMOLED வசதி மற்றும் கொரில்லா க்ளாஸ்5 ம் கொண்டுள்ளது. இந்த போனில் அட்ரெனோ 540 ஜிபியூ உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி ப்ராஸ்சஸ்சர் உள்ளது. மேலும் இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 அல்லது 128 ஜிபி உள்ளார்ந்த சேமிப்புதிறன் வசதியும் உள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொறுத்தமட்டில், பிக்சல்2 போனின் பின்புற கேமரா 12.2 மெகாபிக்சல் உடன் f/1.8 அபெர்சர் மற்றும் ஓஐஎஸ் திறனுடையது. முன்புற கேமராவானது, 8 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் f/2.4 அபெர்சர் உடையது. ஆண்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த கூகுள் பிக்சல்2 ல் 3.5mm ஹெட்போன் ஜேக் உள்ளது. இது தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பாற்றல் கொண்டது என IP67 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த கூகுள் பிக்சல்2 போன், கிண்டா ப்ளு, கருப்பு மற்றும் தூய வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Heres how you can buy Google Pixel 2 at Rs 5999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X