இந்திய சந்தையை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்- முன்னேறும் விவோ!

|

இந்திய சந்தையை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதில் முதல் நான்கு இடத்தில் மூன்று சீன நிறுவனம் தான். அதேபோல் விவோ நிறுவனமும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, 2017 முதல் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது. சாம்சங் இப்போது அதன் இரண்டாவது இடத்தை இழக்கிறது. விவோ 2020 முதல் காலாண்டில் சாம்சங்கை விட சிறப்பாக செயல்பட்டது என்றே தெரிவிக்கப்படுகிறது.

புதிய போட்டியாளரான விவோ

புதிய போட்டியாளரான விவோ

சாம்சங்கின் புதிய போட்டியாளரான விவோவும் ஒரு சீன நிறுவனமாகும். கனலிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, விவோ இந்தியாவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியுள்ளது. விவோ இந்த காலாண்டில் ஏற்றுமதியில் 50% அதிகரிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளரில் விவோ 19.9 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது.

முதல் காலாண்டில் 6.7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி

முதல் காலாண்டில் 6.7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி

விவோ 2020 முதல் காலாண்டில் 6.7 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங் 6.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங்கின் ஏற்றுமதி 14 சதவீதம் சரிந்தது. சாம்சங்கின் சந்தைப் பங்கு 18.9% ஆக இருந்தது. ஆனால் சரிவுக்கு பின்பு 13.7% ஆக குறைந்துள்ளது.

ஏற்றுமதி 200% அதிகரித்துள்ளது

ஏற்றுமதி 200% அதிகரித்துள்ளது

விவோவைத் தவிர, ரியல்மி இந்த காலாண்டின் வருவாயை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு ஏற்றுமதி 200% அதிகரித்துள்ளது. ரியல்மி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சாம்சங்கை முந்திக்கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறிய சியோமி அந்த பதவியை கைவிடவில்லை.

ஜியோ அதிரடி: திடீரென தினசரி 2ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு.!ஜியோ அதிரடி: திடீரென தினசரி 2ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு.!

 சியோமியின் ஆண்டு வளர்ச்சி 8.4%

சியோமியின் ஆண்டு வளர்ச்சி 8.4%

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சியோமி 10.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை 30.6% சந்தைப் பங்கோடு அனுப்பியுள்ளது. சியோமியின் ஆண்டு வளர்ச்சி 8.4% ஆகும்.

அரசு அறிவித்த ஊரடங்கு

அரசு அறிவித்த ஊரடங்கு

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஸ்மார்ட்போன் விற்பனை இல்லை. ஏனென்றால் அத்தியாவசிய பொருட்களின் விற்பனையில் ஸ்மார்ட் போன் இடம்பெறவில்லை. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை 2020 மே 3 வரை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறையாதது செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் விற்க கோரிக்கை

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் விற்க கோரிக்கை

ஸ்மார்ட்போன்கள் ஒரு அத்தியாவசியப் பொருளாகக் கருதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் விற்க அனுமதி பெற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அரசாங்கத்தை அணுகியுள்ளன. அத்தியாவசிய பொருட்களில் செல்போன் சேர்ப்பது குறித்து அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

சுவாரஸ்யமான தகவல்

சுவாரஸ்யமான தகவல்

சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்திய ஸ்மார்ட்போன் சந்தை முழுவதும் தற்போது சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பட்டியலில் முதல் நான்கு நிறுவனங்களில் மூன்று சீனாவைச் சேர்ந்தவை. இந்த பட்டியலில் சாம்சங் மட்டும் சீன நிறுவனம் அல்ல. புதிய தொழில்நுட்பத்தையும் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாவிட்டால் சாம்சங் மேலும் பின்னடைவை சந்திக்கும்.

Best Mobiles in India

English summary
xiaomi is the indias largest smartphone brand in india!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X