Home
Mobile

108MP கேமரா, 6000mAh பேட்டரி: புதிய Samsung கேலக்ஸி எப்54 5ஜி போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

சாம்சங் நிறுவனம் நேற்று புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளிப்கார்ட், சாம்சங்.காம் தளங்களில் இந்த போனை தற்போது வாங்க முடியும்.

பின்பு இந்த போனின் ஆரம்ப விலை ரூ.29,999-ஆக உள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாம்சங் போனின்டிசைன், கேமரா வடிவமைப்பு போன்றவை பழைய மாடல்களை போன்றே உள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன? இதை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய Samsung கேலக்ஸி எப்54 5ஜி போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

அதாவது சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவை வேகமாக இயக்க முடியும். அதற்கு தகுந்தபடி தான் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 1380 பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி எப்54 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும். மேலும் One UI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அவ்வப்போது இந்த போனுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய Samsung கேலக்ஸி எப்54 5ஜி போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். பின்பு 32எம்பி செல்பி கேமராவுடன் இந்த கேலக்ஸி எப்54 5ஜி போன் வெளிவந்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் போன்களை விட இந்த சாம்சங் போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதற்குத் தகுந்த பல சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்54 5ஜி மாடல்.

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் போன்களில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி தான் உள்ளது. ஆனால் இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போன் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடலாம்,வீடியோ பார்க்கலாம். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Samsung கேலக்ஸி எப்54 5ஜி போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

குறிப்பாக 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் தரமான ஆடியோ ஆதரவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Samsung கேலக்ஸி எப்54 5ஜி போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

நம்பி வாங்கலாமா? கேலக்ஸி எப்54 5ஜி போனின் பிராசஸர், கேமரா, டிஸ்பிளே, பேட்டரி என அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் இந்த போனின் வடிவமைப்பில் மட்டும் சாம்சங் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த போன் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். குறிப்பாக மிட்யோர் ப்ளூ (Meteor Blue)மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் (Stardust Silver) நிறங்களில் இந்த போன் கிடைக்கும்.

photo courtesy: mobiledrop.in, fonearena.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Here's quick review of new Samsung Galaxy F54 5G phone with 108MP rear camera, 6000mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X