ஒன்பிளஸ் 11 5ஜி எவ்வாறு பல ஆண்டுகளுக்கு கடினத்தன்மைக்கும், ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது

ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் நடந்து முடிந்த கிளவுட் 11 நிகழ்வில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் அதன் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் போன்ற பல வகையான டிவைஸ்களுடன் சேர்த்து ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு முழு மதிப்பிலான மற்றும் சிறந்த அம்சங்களை பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனை விரும்பும் வாடிக்கையாளர்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. அப்படியான வாடிக்கையாளர்கள், பல ஆண்டுகள் நீடித்து நிலைத்திருக்கும் மற்றும் ஒவ்வொரு நாளும் தன் செயல்திறனை தக்கவைத்து கொள்ளும்படி உருவாக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனையே விரும்புவார்கள்.
ஒரு ஸ்மார்ட்போனின் நீண்ட ஆயுளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கவலைகளானது அதன் வன்பொருள் ஆயுள் தொடர்பான எதிர்பார்ப்புகள், அதற்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட மென்பொருள் ஆதரவு போன்ற வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகும். ஆனால் ஒன்பிளஸ், தன் ஸ்மார்ட்போன் ஆனது பல ஆண்டுகள் கழித்தும் கூட புதியதை போலவே தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. ஒன்பிளஸ் அதை எப்படி செய்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
நீண்ட ஆயுளை உறுதி செய்தல்: சிறிய வன்பொருள் தேர்வுகள் பெரிய முடிவுகளை கொடுக்கும்!
ஒன்பிளஸ் அதன் நுகர்வோர் நட்பு நெறிமுறைகளுக்கு உண்மையாக இருக்கும் நோக்கத்தின் கீழ், சந்தையில் நடக்கும் கண்மூடித்தனமான போட்டிகளில் இருந்து ஒரு படி பின்வாங்கி, ஒன்பிளஸ் 11 5ஜி உடன் ஒரு முழுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளது. உதாரணமாக, இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி உள்ளது. இது கிளாஸ்-லீடிங் ப்ராசஸர் ஆகும் மற்றும் தற்போதுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இடம்பெறக்கூடிய சிறந்த சிப்செட்டும் ஆகும்.அறியாதோர்களுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸில் கூட இதே சிப்செட் தான் உள்ளது. இருப்பினும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த ப்ராசஸர் அடுத்த சில ஆண்டுகளுக்கு விஷயங்களை அப்படியே தக்க வைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும், ஒன்பிளஸ் அதன் "மிருகத்தனமான" ஸ்னாப்டிராகன் ப்ராசஸரை 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 256ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் இணைத்துள்ளது. இந்த அம்சங்களில் ஏதேனும் ஒன்றை சமரசம் செய்வது ஸ்மார்ட்போனின் செயல்திறனுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் பல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் துரதிர்ஷ்டவசமாக சில சமரசங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் அப்படி இல்லை. இது அடுத்த நான்கு முதல் ஐந்து வருடங்களுக்கு புதியது போலவே செயல்படும். அதற்கு இதனுள் உள்ள வேகமான ரேம் மற்றும் பெரிய இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது ப்ராசஸருக்கு பக்கபலமாக இருக்கும். மேலும் நாள்பட அதிகரிக்கும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் செயலாக்கம் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர் சுமைகளையும் சமாளிக்க உதவும்.

தரமான ப்ராசஸிங் வலிமையோடு சேர்த்து, ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம்-விட்டா என்கிற தொழில்நுட்பமும் பயன்படுத்துகிறது: ரேம்-விட்டா என்பது ரேம் பயன்பாட்டை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் சொந்த மெஷின்-லேர்னிங் தொழில்நுட்பமாகும். இந்த மூலம் வீடியோ எடிட்டிங், கேமிங் மற்றும் ஃபைல் டிரான்ஸ்பர் போன்ற பணிகளுக்கு ஏற்றபடி, ஸ்மார்ட்போனில் உள்ள ரேம் பயன்படுத்தப்படும். மேலும் இந்த தொழில்நுட்பம், நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட ஆப்களின் பயன்முறைக்கு ஏற்ப ரேம்-ஐ மாற்றியமைத்து, தடுமாற்றமில்லாத அனுபவத்தையும் உறுதி செய்கிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் வயது மற்றும் மெஷின் லேர்னிங்கின் தரவுகளின் அடிப்படையில் காலப்போக்கில் சிறப்பாகி கொண்டே போகும். அதாவது திராட்சை ரசத்தை போல நாளுக்கு நாள் - சுவையும் தரமும் அதிகரிக்கும்!
ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்கும் 6.7-இன்ச் க்யூஎச்டி+ எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது அமோஎல்இடி பேனல்களின் வழக்கமான டீப் கான்ட்ராஸ்ட் மற்றும் 10-பிட் கலர் டெப்த் மற்றும் டால்பி விஷன் ஆதரவுடன் குறைபாடற்ற கலர் அக்யூரசியையும் வழங்குகிறது. மேலும் நீங்கள் காணும் கன்டென்ட்டை பொறுத்து அதிகபட்சமாக 120ஹெர்ட்ஸ் மற்றும் குறைந்தது 1ஹெர்ட்ஸ் என்கிற ரெஃப்ரெஷ் ரேட்டிற்கு இடையே வேறுபடும். இது ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் ஆனது ஒரு நாள் முழுவதும் நீடிப்பதையும் உறுதி செய்கிறது.
பேட்டரியை பற்றி பேசுகையில், அபத்தமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதன் பேட்டரிகளை விரைவான சிதைவுக்கு ஆளாகின்றன மற்றும் நீண்ட காலத்திற்கு பேட்டரி லைஃப்பை தக்கவைப்பதும் இல்லை என்று நுகர்வோர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்,ஸ்மார்ட்போனில் அப்படி இல்லை. இதன் 5,000எம்ஏஎச் பேட்டரியானது ஒரு நாள் முழுவதும் அதிக உபயோகத்தில் நீடிப்பது மட்டுமின்றி, அதிக திறன் கொண்ட100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெரிய பேட்டரி இரண்டு தனித்தனி செல்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 2,500எம்ஏஎச் திறன் கொண்டது. இது சிறந்த பேட்டரி சார்ஜிங் தெர்மல்களை அனுமதிக்கிறது, இது பேட்டரியின் ஆயுளை பாதிக்காமல் அதிக சார்ஜிங் வேகத்தை செயல்படுத்துகிறது. இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரி அரை தசாப்தத்திற்கு ஒரே பேட்டரி லைஃப்பை சீராக வைக்கும்!
TÜV ரைன்லேண்ட் ஆல் சோதனை செய்யப்பட்டது: நம்பி வாங்கலாம்!
இந்த பிரீமியம் போனின் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஒன்பிளஸ் 11 போனை பற்றி சற்று உயர்வாக கூறுகிறது. ஆனாலும் அதை விட போனை சோதனை செய்யும் நிறுவனங்கள் கூறுவது மற்றும் சான்றிதழ் கொடுப்பது தான் தனி சிறப்பு. அந்த வகையில் TÜV ரைன்லேண்ட் எனப்படும் நிறுவனம் இந்த புதிய ஒன்பிளஸ் போனை முழுமையாக சோதனை செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போனின் தனி சிறப்புகள், பாதுகாப்பு வசதி, வன்பொருள் போன்றவற்றை சோதனை செய்துள்ளது TÜV ரைன்லேண்ட் நிறுவனம். குறிப்பாக இந்த போன் அனைத்திலும் மிகவும் நம்பகத்தன்மை உடையது என்று சான்றிதழ் கொடுத்துள்ளது TÜV ரைன்லேண்ட் நிறுவனம்.

TÜV ரைன்லேண்ட் ஆனது இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனுக்கு பல்வேறு சோதனைகளை செய்து சான்றளித்துள்ளது. குறிப்பாக இந்த போனில் சார்ஜிங் அம்சத்தில் எந்த சிக்கலும் இல்லை என்றும், பாதுகாப்பாக சார்ஜ் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் நம்பி வாங்கலாம். இதுதவிர போனின் பேட்டிரிக்கான நிகழ்நேர வெப்பநிலை கண்காணிப்பு போன்றவற்றை சோதனை செய்துள்ளது TÜV ரைன்லேண்ட். இந்த முக்கியமான சோதனைகளில் போனை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்றும், எவ்வித சிக்கலும் வராது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றில் அதிக முக்கியத்தும் கொடுக்கிறது.
அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் 11 போனின் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் வசதியுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பல வருடங்களுக்கு தாங்கும் என்பது தான் உண்மை;. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான சாப்ட்வேர் வசதி: நீடித்து உழைக்கும்!
நீண்ட வருடங்கள் நீடித்து உழைக்கும் வகையில் இந்த ஒன்பிளஸ் போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் தனித்துவமான சாப்ட்வேர் வசதியுடன் வெளிவந்துள்ளது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போனுக்கு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் நான்கு வருடங்ளுக்கு கிடைக்கும் என்றும், ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2028-ஆம் ஆண்டை கடந்து கூட இந்த போனில் பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் எதிர்காலத்திற்கு தகுந்த போன் தான் இந்த ஒன்பிளஸ் 11 மாடல். கண்டிப்பாக இந்த போன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக இந்த போனின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ள TÜV ரைன்லேண்ட் இன் சான்றிதழ் கிடைத்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 11 5ஜி டயல் பேட், கேமரா வசதி, டிஸ்பிளே போன்றவற்றை முழுமையாக சோதனை செய்து தான் அந்நிறுவனம் சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையிலான A மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகும் கூட சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கும் இந்த புதிய ஒன்பிளஸ் போன்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் தாங்கக்கூடிய வகையில் சிறந்த மென்பொருள் வசதியுடன் ஒரு போனை நீங்கள் தேடுகீறிர்கள் என்றால் இந்த புதிய ஒன்பிளஸ் போனை வாங்குவது தான் நல்லது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட் மற்றும் மேம்பட்ட அம்சங்களை கொணடுள்ளதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்


Click it and Unblock the Notifications








