பாத்ரூம்ல மொபைல் யூஸ் : காத்திருக்கும் கண்டங்களும் தப்பிக்க வழியும்..!

|

"அதெல்லாம் எங்களுக்கு தெரியும் பாஸ்.. பாத்ரூம்ல மொபைல்போன் பயன்படுத்தும் போது.. பாத்து பத்திரமா தண்ணீல விழுந்துறாம பாத்துக்கணும் அதானே..??!! அதெல்லாம் நாங்க தெளிவா யூஸ் பண்ணுவோம்ல..!!" என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம்..!

பாத்ரூம்களில் மொபைல்களுக்கு தண்ணீல கண்டம் என்பது போல், பாத்ரூமில் மொபைல்களை பயன்படுத்துவதால் உங்களுக்கும் சில 'கண்டங்கள்' காத்ருக்கின்றன. அவைகளைப் பற்றிய தொகுப்பே இது..!!

அர்த்தம் :

அர்த்தம் :

பாத்ரூம்களில் நம்மோடு சேர்ந்து நமது மொபைல் போன்களும் நுழைகிறது என்றால்... ஒன்று - நமக்கு 'ரொம்ப போர்' அடிக்கிறது என்று அர்த்தம், இல்லையெனில் - மிக முக்கியமான போன் கால் என்று அர்த்தம்..!

கண்டங்கள் :

கண்டங்கள் :

முக்கியமான போன் கால், வாட்ஸ்ஆப் மெசேஜ், இமெயில், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் என எதுவாக இருப்பினும் சரி இன்றோடு அந்த பழக்கத்தை முடிந்த வரை தவிர்க்கவேண்டும் இல்லையெனில், சில 'கண்டங்கள்' உங்களுக்காகவே காத்ருக்கின்றன என்பது தான் நிதர்சனம்..!

கிருமிகள் :

கிருமிகள் :

டிவி விளம்பரத்தில் சொல்வது போல பார்க்க மட்டும் தான் உங்கள் பாத்ரூம் மிகவும் சுத்தமாக இருக்கும், ஆனால் உண்மையில் உங்கள் பாத்ரூமில் கிருமிகள் மிக அதிகம், அதனுள் கொண்டு செல்லபடும் உங்கள் மொபைல்களில் கிருமிகள் மிக எளிதில் தொற்றிக் கொள்ளலாம்..!

உடல்நல கோளாறு :

உடல்நல கோளாறு :

இதன் மூலம் வயிற்றுப்போக்கு தொடங்கி சிறுநீர் பாதை நோய் தொற்று வரையிலாக பல உடல்நல கோளாறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் !!

ஆபத்து :

ஆபத்து :

அது மட்டுமின்றி எசரிக்கியா கோலை (Escherichia coli) மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் (Flu Viruses) பரவும் ஆபத்துகளும் உண்டு, எசரிக்கியா கோலை என்பது சிறுகுடலில் காணப்படும் ஒரு கிராம் நெகட்டிவ் கோல-வடிவமுள்ள பாக்டீரியமாகும்.

பொது கழிப்பறை :

பொது கழிப்பறை :

உங்கள் வீட்டு பாத்ரூம்களிலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்றால் பொது கழிப்பறைகளில் எண்ணில் அடங்காத நோய்கள் காத்திருக்கின்றன என்பதை நீங்கள் சொல்லாமல் புரிந்து கொள்வது அவசியம்.

டிப்ஸ் :

டிப்ஸ் :

"சரி.. வேறு வழியே இன்றி பாத்ரூமில் மொபைல் பயன்படுத்திட்டேன்ப்பா..! இப்போ என்ன பண்ணனும்..??" என்று கேட்டால் அதுவும் சிம்பிள் தான். பாத்ரூம் பயன்பாட்டிற்கு பின்பு உங்கள் கைகளை நன்கு கழுவிய பின்பு, ஒரு உலர்ந்த துணியை வைத்து உங்கள் மொபைலை நன்றாக துடைத்து சுத்தம் செய்திடுங்கள்..!!

பின்குறிப்பு :

பின்குறிப்பு :

இவ்வாறாக மொபைலை துடைத்து சுத்தம் செய்யும் பொது எந்த விதமான இரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். "நான் ரொம்ப சுத்த பிராணி" என்று நினைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் இந்த காரியம் உங்கள் மொபைலை 'டேமேஜ்' செய்யும், உஷாராக இருங்கள்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

படுக்கையில் மொபைல் பயன்பாடு : மோசமான பின் விளைவுகள்..!


மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Here is Why You Should NEVER Use Your Phone In The Bathroom. Read more about this in Tamil GizBot..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X