ஸ்மார்ட்போனின் இதயமே இதுதான்: MediaTek chipset ஆதரவு கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

|

ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலைப்பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், பெரும்பகுதி ஸ்மார்ட்போன்களை இயக்குவது இரண்டு ரக சிப்செட் தான். அது குவால்காம் மற்றும் மீடியாடெக் ஆகும். மீடியாடெக் ஆதரவோடு சந்தையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

மீடியாடெக் 2020 ஆம் ஆண்டில் குவால்காம்-ஐ பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய சிப்செட் சப்ளையராக உருவெடுத்தது.

இரண்டு சிப்செட் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது.

சமீப காலமாக மீடியாடெக் நிறுவனம் தான் முன்னேற்றத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில் மீடியாடெக் சிப்செட் ஆதரவோடு சந்தையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 7 ப்ரோ

ஒப்போ ரெனோ 7 ப்ரோ

மீடியா டெக்கின் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் ஒப்போ ரெனோ 7 ப்ரோ இயக்கப்படுகிறது. மீடியாடெக்கின் மிகவும் சக்தி வாய்ந்த செயல்திறன் கொண்ட சிப்செட் ஆகும்.

ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.39,999 ஆகும்.

65 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

65 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்ட் 11 அடிப்படையிலான ColorOS 12 மூலம் இயங்குகிறது. ரெனோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது முழு HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.55 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது 90Hz ரெஃபரஷிங் ரேட்டிங்கை கொண்டிருக்கிறது. 50MP சோனி IMX766 முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஷூட்டர், 2MP மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் வண்ண வெப்பநிலை சென்சார் என குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

செல்பி ஆதரவுக்கு என Sony IMX709 32MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் 4500mAh பேட்டரி உடன் 65 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

ரியல்மி 9 5ஜி

ரியல்மி 9 5ஜி

ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது Stargaze White மற்றும் Meteor Black ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

4ஜிபி+64ஜிபி விலை ரூ.14,999 எனவும் 6ஜிபி+128ஜிபி விலை ரூ.17,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி SoC மூலம் இ்நத ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. அதாவது மீடியாடெக் டைமன்சிட்டி 810 5G மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

ரிப்பிள் ஹாலோகிராபிக் டிசைன்

இந்த ஸ்மார்ட்போன் ரிப்பிள் ஹாலோகிராபிக் டிசைனைக் கொண்டிருக்கிறது. 6.5-இன்ச் முழு-எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 600 நிட்்ஸ உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது.

48 எம்பி உயர் தெளிவுத்திறன் கொண்ட முதன்மை கேமரா, 2MP B&W போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. 16 எம்பி அல்ட்ரா கிளியர் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

18 வாட்ஸ் டார்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 15 நிமிடத்தில் போனை 50% வரை சார்ஜ் செய்யலாம். ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் மீடியா டெக் நிறுவனத்தோடு இணைந்தது. அதன்படி மீடியாடெக் சிப்செட் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.23,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.24,999 எனவும் வெளியானது.

1080x2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

90Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் HDR 10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இதில் உள்ளது.

MediaTek Dimensity 900 SoC சிப்செட்

OnePlus Nord CE 2 5G ஆனது MediaTek Dimensity 900 SoC மூலம் இயக்கப்படுகிறது. 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது.

65W SuperVOOC சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இதில் உள்ளது.

விவோ வி23 5ஜி

விவோ வி23 5ஜி

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலையானது ரூ.29,990 எனவும் 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலையானது ரூ.34,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் அமோலெட் FHD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

MediaTek Dimensity 920 SoC சிப்செட்

64 எம்பி பிரைமரி ஷூட்டர், 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 8 எம்பி சென்சார் என டூயல் பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

Vivo V23 ஆனது MediaTek Dimensity 920 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ

ரெட்மி நோட் 11 ப்ரோ

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி விலை ரூ.17,999 எனவும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டார் ப்ளூ, ஸ்டீல்த் ப்ளாக் மற்றும் பாண்டம் ஒயிட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 6.67 இன்ச் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

MediaTek Helio G96 SoC சிப்செட்

MediaTek Helio G96 SoC மூலம் இயங்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 மூலம் இயக்கப்படுகிறது.

108 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா இதில் உள்ளது.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Here is the list of top 5 smartphones powered by MediaTek chipset

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X