6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி யூ1: புகைப்படம் வெளியீடு.!
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.21-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ரியல்மி நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்ய அனைத்து ஸ்மார்ட்போன்களும் அதிக விற்பனை
செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று வரும் 28-ம் தேதி புதிய ரியல்மி யூ1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இப்போது அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

ரியல்மி யூ1:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.21-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயலி:
இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

சேமிப்பு:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி 102எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை மற்றும் விற்பனை:
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 28-ம் தேதி அமேசான் வலைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்இ அதேபோன்று இந்த சாதனத்தின் விலை ரூ.15,000-முதல் 20,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications