Just In
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
12 நாட்கள் தங்குகிறேன்.. தெருத் தெருவாக மக்களை சந்திக்கப் போகிறேன்.. ஈரோட்டில் சீமான் அறிவிப்பு!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது... சின்ன பையனுடன் காதலா என்ற கேள்விக்கு மாஸ்டர் நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மின்னல் வேக சார்ஜிங் ஆதரவுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சில செல்போன் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்பட்ட 5ஜி போன்களின் விலையை குறைத்து பட்ஜெட் விலையில் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் அசத்தலான ஐந்து 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,390-விலையில் வாங்க முடியும். இந்த சாம்சங் போன் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட்,50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 11டி 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 810 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, கைரேகை ஸ்கேனர், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
ரியல்மி narzo 50 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ரியல்மி போன் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. 48எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
iQOO Z6 ஸ்மார்ட்போன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த iQOO Z6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி அருமையான பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த 5 ஸ்மார்ட்போன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் அடுத்த வருடம் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470