ஸ்மார்ட்போனில் உள்ள இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

By Siva
|

இன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. ஸ்மார்ட்போனின் உதவியால் பல விஷயங்களை மிக எளிதில் செய்யலாம். உதாரணமாக அப்பாயின்மெண்ட் பிக்ஸ் செய்வது, டாஸ்க்கை மேனேஜ் செய்வது என அடுக்கி கொண்டே போகலாம்

ஸ்மார்ட்போனில் உள்ள இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

ஸ்மார்ட்போனை எப்படியெல்லாம் உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

உங்கள் டிவியை கட்டுப்படுத்தலாம்:

உங்கள் டிவியை கட்டுப்படுத்தலாம்:

தற்போது வெளிவரும் பல ஸ்மார்ட்போன்களில் இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளது. எனவே டிவி, ஏசி உள்பட பல பொருட்களுக்கு ரிமோட் போல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்

கிளவுட்:

கிளவுட்:

மெமரி அதிகம் செல்வாகும் சில முக்கிய டாக்குமெண்ட்டுகளை குறைந்த மெமரியில் கிளவுட் மூலம் சேமித்து வைத்து கொள்ளலம். கூகுள் அக்கவுண்ட் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவைகளை பயன்படுத்தி இந்த வசதியை அனைவரும் பெற்று கொள்ளலாம்

காலண்டர்:

காலண்டர்:

உங்களது முக்கிய நிகழ்ச்சி நிரல்களை ஸ்மார்ட்போன் காலண்டரில் பதிவு செய்து கொண்டால் மிக எளிதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தவறாமல் பங்கேற்று கொள்ளலாம். மேலும் ஸ்மார்ட்போனில் நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும் அம்சங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

நீ ஒன்னும் சொல்ல வேணாம், காசு வாங்கிக்கோ - சியோமி மி ஏ1 ஒன்னு கொடு.!நீ ஒன்னும் சொல்ல வேணாம், காசு வாங்கிக்கோ - சியோமி மி ஏ1 ஒன்னு கொடு.!

 வாய்ஸ் அசிஸ்டெண்ட்:

வாய்ஸ் அசிஸ்டெண்ட்:

ஸ்மார்ட்போன்களின் மிக முக்கிய வசதிகளில் ஒன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் தவறாமல் உள்ளது. ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்து கொண்டு வாய்ஸ் மூலமே உங்களுக்கு தேவையான போன் நம்பர், இமெயில் எழுதுவது உள்பட பல கட்டளைகளை பிறப்பித்தால் உங்களுடைய பெர்சனல் அசிஸ்டெண்ட் போலவே இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் உங்களுக்கு செய்து கொடுக்கும்

தேவையில்லாத செயலிகளை டிஸேபிள் செய்யுங்கள்:

தேவையில்லாத செயலிகளை டிஸேபிள் செய்யுங்கள்:

ஒருசில செயலிகளை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருப்பீர்கள், அல்லது எப்போதாவது ஒருமுறை பயன்படுத்துவீர்கள். இந்த மாதிரியான செயலிகளை டிஸேபிள் செய்து வைத்து கொண்டால் ஸ்மார்போனின் மெமரி மிச்சப்படும். அப்ளிகேசன் மேனேஜ்மெண்ட் சென்று குறிப்பிட்ட செயலியை ஓப்பன் செய்து அதில் உள்ள டிஸேபிள் ஆப்சனை க்ளிக் செய்தால் போதும்

கிராஸ் பிளாட்பார்ம் ஆப்ஸ்:

கிராஸ் பிளாட்பார்ம் ஆப்ஸ்:

நீங்கள் ரெகுலராக கிராஸ் பிளாட்பார்ம் ஆப்ஸ்-ஐ பயன்படுத்துபவராக இருந்தால் புஷ்புல்லட் ஆப்ஸை பயன்படுத்துங்கள். இந்த ஆப்ஸ் மற்ற உபகரணங்களுடன் இணைக்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். வாட்ஸ் அப் மெசஞ்சர், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
With smartphone technology, you can do a lot of things. we have compiled a list on how to use your smartphones more efficiently than you do right now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X