மொபைல்போன் பேட்டரி ரேடியேஷனால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகளும் அவை தவிர்க்கும் வழிகளும்

By Siva
|

நாம் வாழும் வாழ்க்கையே ஸ்மார்ட்போன் வாழ்க்கையாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஸ்மார்டோன் இல்லாமல் யாரும் இயல்பு வாழ்க்கை வாழவே முடியாது என்ற நிலை ஆகிவிட்டது.

மொபைல்போன் பேட்டரி ரேடியேஷனால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகளும் அவை

ஆனால் அதே நேரத்தில் அதிக அளவு ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதால் நமது உடலின் பல பாகங்கள் நம்மை அறியாமலேயே பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பலர் உணர்ந்து கொள்வதில்லை.

அமேசான் சிறப்பு விற்பனை : புதிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிகளவு சலுகைகள்!

குறிப்பாக செல்போன் பேட்டரியில் இருந்து வெளிப்படும் ரேடியேசன் அலைகள் நமது உடலை குறிப்பாக காதுகள் மற்றும் முகத்தை நேரடியாக தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அதிக நேரம் போன் பேசினால் பேட்டரி வெப்பமாகி அந்த வெப்பத்தால் பல உபாதைகள் ஏற்படுகிறது.

மோசடி மெசேஜ்களை கண்டறிவது எப்படி.? ரொம்ப சிம்பிள்..!

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதையும், அதில் இருந்து தப்பிக்க என்னென்ன பாதுகாப்பு முறைகள் உள்ளது என்பதையும் தற்போது பார்ப்போம்,

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மொபைல் ரேடியேஷால் ஏற்படும் உயிரியல் கோளாறுகள்

மொபைல் ரேடியேஷால் ஏற்படும் உயிரியல் கோளாறுகள்

ஸ்மார்ட்போன்களில் இருந்து ரேடியோ ஃபிரிக்வன்ஸி (Radio Freuency) அல்லது மைக்ரோவேவ் ரேடியேஷன் வெளிப்படுகிறது. இந்த ரேடியேஷன் நீங்கள் போன் செய்யும்போதும்,, போன் அழைப்பை ரிசீவ் செய்யும்போதும், எஸ்.எம்.எஸ் டைப் செய்யும்போதும், ஸ்டீரெம் வீடியோ பார்க்கும்போதும், மியூசிக் கேட்கும்போதும் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி உடலில் உள்ள செல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, மூளைக்கு செல்லும் ரத்தம் கட்டியாவதும், சில சமயம் மூளை புற்றுநோய்க்கும் காரணமாக அமைகின்றது.

பேட்டரி ரேடியேஷனால் ஏற்படும் பொதுவான விளைவுகள்

பேட்டரி ரேடியேஷனால் ஏற்படும் பொதுவான விளைவுகள்

மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் அலைகளால் ஒருசில குறிப்பிட்ட பாகங்களின் பாதிப்புகள் மட்டுமின்றி பொதுவான விளைவுகளும் ஏற்படுவதுண்டு. தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் இன்னும் சில.நோய்களும் பேட்டரி ரேடியேஷனா வரும் பொதுவான உபாதைகள் ஆகும்.

இனி இந்த ரேடியேஷனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து பார்ப்போம்,

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் அழைப்புகளை குறைத்து கொள்ளுங்கள்

உங்கள் அழைப்புகளை குறைத்து கொள்ளுங்கள்

நண்பர்கள், காதலி, குடும்பத்தினர் ஆகியோர்களிடம் போனில் பேசும்போது முக்கிய விஷயங்களுக்காக மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துங்கள். முடிந்த அளவு குறைவான நேரத்தில் பேச்சை முடித்து கொள்ளுங்கள். நாம் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர் அருகில் இருந்தால் நேரடியாக பேசி கொள்ள முயற்சி செய்யுங்கள். மணிக்கணக்கில் மொபைல் போனில் பேசுவது உங்கள் உடலுக்கும் பாதிப்பு, பர்சுக்கும் பாதிப்பு என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

உடல் பாகங்களில் இருந்து செல்போனை தனிமைப்படுத்துங்கள்

உடல் பாகங்களில் இருந்து செல்போனை தனிமைப்படுத்துங்கள்

நீங்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்றாலும், அதில் இருந்து 30 நொடிகளுக்கு ஒரு முறை ரேடியேஷன் வெளிவந்து கொண்டே இருக்கும். நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகில் இருக்கும் டவர் ஆகியவற்றை தொடர்பு கொள்ள ரேடியேஷன் எந்த நேரமும் வெளிவந்து கொண்டே இருக்கும்.

எனவே மொபைல்போனை பயன்படுத்தவில்லை என்றால் உடலில் உள்ள பாகங்களை தொடும்படி மொபைல் போனை வைக்க வேண்டாம். இதனால் உங்கள் உடலில் உள்ள முக்கியமான பாகங்கள் காப்பாற்றப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பயணத்தின்போதே ஸ்மார்ட்போன் வேண்டாமே..

பயணத்தின்போதே ஸ்மார்ட்போன் வேண்டாமே..

பேருந்து, ரயில், கார் அல்லது வேறு ஏதேனும் வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது முடிந்தவரை செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நகர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களில் ஸ்மார்ட்போனை உபயோகித்தால் அதில் இருந்து வெளிப்படும் சிக்னலின் அளவு அதிகளவு இருப்பதாலும், மேலும் ரேடியேஷனை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

நிறுத்தப்பட்டிருக்கும் காரின் உள் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம்

நிறுத்தப்பட்டிருக்கும் காரின் உள் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம்

ஓடும் வாகனங்களில் மட்டுமின்றி நிறுத்தப்பட்டிருக்கும் காரின் உள் இருக்கும்போதும் செல்போனை பயன்படுத்த வேண்டாம். காரின் உள் ஏற்கனவே வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பேட்டரியில் இருந்து வெளிப்படும் ரேடியேஷனும் அதிகமாக இருப்பதால் முடிந்தவரை காரின் உள் மொபைல் போனை உபயோகிக்காமல் இருப்பது நலம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தூங்கும்போது மொபைல் போனை அருகில் வைக்க வேண்டாமே?

தூங்கும்போது மொபைல் போனை அருகில் வைக்க வேண்டாமே?

இரவு நேரங்களில் பொதுவாக மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் ரேடியேஷனும் மற்ற எலக்ட்ரோ மேக்னடிக் அலைகளும் மிக அதிகம் இருக்கும் என்பதால் தூங்கும்போது மொபைல்போன் அருகில் இருந்தால் நம்முடைய தூக்கத்தின் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி இதய பாதிப்பு, உடல் வலி, அலர்ஜி உள்பட பல பாதிப்புகள் உனாக வாய்ப்பு உள்ளது. எனவே தூங்கும்போது கண்டிப்பாக மொபைல்போனை சில அடிகள் தூரத்தில் வைக்க வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's how to avoid the deadly health hazards that mobile battery radiation builds on a human body.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X