1 இல்ல.. 6 காரணங்கள் இருக்கு.. இந்த அசத்தலான Samsung 5ஜி போனை வாங்க.!
சாம்சங் நிறுவனம் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனின் விலை ரூ.14,990-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனின் விலை ரூ.16,490-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். சரி இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை "கண்களை மூடிக்கொண்டு" வாங்குவதற்கான6 காரணங்களைப் பார்ப்போம்.

முதல் காரணம்: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது கேலக்ஸி எம்14 5ஜி. குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் தரமான கேமரா வசதியுடன் இந்த கேலக்ஸி எம்14 5ஜி போன் வெளிவந்துள்ளது.
இரண்டாவது காரணம்: சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. காரணம் என்னவென்றால் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனில் நீங்கள் நீண்ட நேரம் இணையத்தைப் பயன்படுத்தலாம், கேம் விளையாடலாம், அதற்குத் தகுந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மூன்றாவது காரணம்: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் ஃபுல் எச்டி ஆதரவு கொண்டுள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
நான்காவது காரணம்: ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவு கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த போனில் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் One UI Core 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஐந்தாவது காரணம்: குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் 5ஜி வசதியை வழங்குகிறது. அதாவது பல முன்னணி நிறுவனங்கள் இதே அம்சங்களுடன் ரூ.20,000-க்கு மேல் 5ஜி போன்களை அறிமுகம் செய்கிறது. மேலும் 5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆறாவது காரணம்: இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன் ஸ்டீரியோ ஸ்பீக்கஸ், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ப்ளூ, டார்க் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ளது. அதாவது மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாம்சங் 5ஜி போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications