ஆளுக்கு 2, 3 ஆர்டர்.. இவ்ளோ கம்மி விலைக்கு OnePlus Nord CE 3, Redmi 12 5G-ஆ.. அமேசான்ல குவியும் கூட்டம்!
ஆளுக்கு இரண்டு, மூன்று ஆர்டர்களை போட்டுத்தாக்கும் அளவிற்கு.. சுதந்திர தின சிறப்பு விற்பனையான அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில் (Amazon Great Freedom Festival Sale) பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மாடல்கள் மீது என்னென்ன ஆஃபர் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில்.. கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) முதல் சில தினங்களுக்கு முன் அறிமுகமான ரெட்மி 12 5ஜி (Redmi Note 12 5G) வரை பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானின் இந்த ஆஃபர் பட்டியலில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3), ஐக்யூ நியோ 7 ப்ரோ (iQOO Neo 7 Pro), ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R), சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) போன்ற மாடல்களும் உள்ளன. இவைகளின் மீது என்னென்ன தள்ளுபடி கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:
ஐபோன் 14 தற்போது 66,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.79,900 ஆகும். அதாவது நீங்கள் ரூ.12,901 தள்ளுபடியை பெறுவீர்கள் என்று அர்த்தம். வங்கி சலுகையுடன் (Bank Offer) சேர்த்து இதன் விலையை ரூ.66,249 ஆகவும் குறைக்கலாம். இதேபோல ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மாடலானது அமேசான் வழியாக ரூ.1,18,900 க்கு வாங்க கிடைக்கிறது.
மிகவும் சமீபத்தில் ரூ.26,999 க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலின் போது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும். இதே போல ஒரு சில தினங்களுக்கு முன் அறிமுகமான ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அந்த வெறும் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் ஐக்யூ பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் மீதான ஆபர்களை தேடினால், ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.32,499 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் ஐக்யூ மாடலை தேடினால் ஐக்யூ இஸட்6 லைட்-ஐ (iQOO Z6 Lite) கருத்தில் கொள்ளலாம்; இது வங்கி சலுகையின் கீழ் ரூ.13,249 க்கு வாங்க கிடைக்கிறது.
2023 ஆம் ஆண்டின் மிக முக்கியமான லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் சாம்சங்கின் தனது போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இஸட் போல்ட் 5 5ஜி ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். இது அமேசானின் ஃப்ரீட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.1,46,999 க்கு வாங்க கிடைக்கும். இதன் மீது எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஒருவேளை நீங்கள் சாம்சங் மாடலைத்தான் தேடுகிறீர்கள் ஆனால் பட்ஜெட் விலையில் உள்ள போன்கள் தேவை என்றால்.. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஆனது ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கிறது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இதேபோல ரெட்மி கே50 (Redmi K40) ஆனது ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.
உங்களிடம் ரூ.30,000 க்குள் என்கிற அளவிலான பட்ஜெட் (Under Rs.30,000 Budget) இருந்தால், நீங்கள் ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G) ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 27,999 ஆகும். ஆனால் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது ரூ.26,499 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








