வாய் பிளக்க வைக்கும் விலைக்குறைப்பு! இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க Amazon-ல் குவியும் கூட்டம்!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதால், இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஒன்றின் மீது விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள அடுத்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? வாருங்கள் விளக்கமாக பார்க்கலாம்!

விலைக்குறைப்பை பெற்றுள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!

விலைக்குறைப்பை பெற்றுள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி (OnePlus 10 Pro 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன OnePlus 11 ஆனது விரைவில் அறிமுகப்படுத்தும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான வேகத்தில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!

இன்னொரு சுவாரசியமான விஷயம்!

இன்னொரு சுவாரசியமான விஷயம்!

2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான OnePlus 10 Pro 5G மீதான இந்த விலைக்குறைப்பில், இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ்களுமே புதிய (ஆபர்) விலைகளை பெற்றுள்ளது.

மேலும் - வழக்கம் போல - இந்த விலைகுறைப்பானது நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் வழியாக அணுக கிடைக்கிறது!

பழைய விலை VS புதிய விலை:

பழைய விலை VS புதிய விலை:

முன்னதாக ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.66,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது இது ரூ.61,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதே போல ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.71,999 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் தற்போது இது ரூ.66,999 க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதாவது இரண்டு வேரியண்ட்களின் மீதும் ரூ.5000 என்கிற ப்ரைஸ் கட் கிடைக்கிறது!

இது நிபந்தனைகள் இல்லாத ஒரு தள்ளுபடி ஆகும்!

இது நிபந்தனைகள் இல்லாத ஒரு தள்ளுபடி ஆகும்!

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீதான இந்த விலைக்குறைப்பு, எந்த நிபந்தனைகளும் இல்லாத ஒரு தள்ளுபடி ஆகும்.

அதாவது இந்த தள்ளுபடியை பெற நீங்கள் குறிப்பிட்ட வங்கியின் கார்டு அல்லது சில கூப்பனைப் பயன்படுத்த வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, ரூ.5000 என்கிற தள்ளுபடிக்கு பிறகும் கூட அணுக கிடைக்கும் சில பிரத்யேக சலுகைகள் உள்ளன!

அதென்ன சலுகைகள்?

அதென்ன சலுகைகள்?

நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் வழியாக வாங்கினால், நோ காஸ்ட் EMI விருப்பங்கள் அணுக கிடைக்கும் மற்றும் OnePlus Buds Z2 மற்றும் Buds Pro மீதான சில தள்ளுபடிகளையும் பெறலாம்.

ஒருவேளை நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வழியாக வாங்கினால் - குறிப்பிட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் OnePlus 10 Pro மீது 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மீதும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது; அதன் கீழ் நீங்கள் ரூ.25,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம்!

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி-யின் முக்கிய அம்சஙகள்:

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி-யின் முக்கிய அம்சஙகள்:

- 6.67-இன்ச் QHD+ OLED டிஸ்ப்ளே
- LTPO 2.0 பேனல்
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 12ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட்
- ஹாசல்பிளாட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் மெயின் கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ்
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு

Best Mobiles in India

English summary
Heavy demand on oneplus 10 pro 5g smartphone in amazon after it gets rs 5000 price cut

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X