Home
Mobile

எகிறியது மவுசு.. ரூ.4000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வரும் Motorola போன்.. என்ன மாடல்?

கடந்த மே 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி.. மே 22 ஆம் தேதியன்று முதல் விற்பனையை (First Sale) சந்தித்த.. மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றானது.. இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் விளைவாக தற்போது "செம்ம டிமாண்ட்" ஆகியுள்ளது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போனின் மீது அறிமுக சலுகையாக ரூ.4000 தள்ளுபடியும் கிடைக்கிறது. அது என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? அடுத்த விற்பனை எப்போது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? எப்போது அடுத்த விற்பனை? நாம் இங்கே பேசுவது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போனை பற்றித்தான். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் கடந்த மே 22 ஆம் தேதியன்று விற்பனைக்கு வந்தது. அந்நாளில் இது நல்ல எண்ணிக்கையில் / நல்ல முறையில் விற்பனையை கண்டுள்ளது போல் தெரிகிறது.

எகிறியது மவுசு.. மீண்டும் விற்பனைக்கு வரும் Motorola போன்!

ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்த பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை (Next Sale) குறித்த பேனரில் "உங்களுடைய அற்புதமான ரெஸ்பான்ஸிற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளது. அதே பேனரில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை மே 31 ஆம் தேதி மாலை 5 மணி முதல் தொடங்கும் என்றும் பிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

என்ன விலை? என்னென்ன சலுகைகள்? இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் இவ்விரு டோரேஜ் ஆப்ஷன்களுமே ஹாட் பிங்க் மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ கலர்களில் வேகன் ஸ்கின் பினிஷ் உடன் விற்பனை செய்யப்படுகிறது; மூன்றாவதாக பாலிமெத்தில் மெதக்ரிலேட் (பிஎம்எம்ஏ) பினிஷ் கொண்ட ஃபாரஸ்ட் ப்ளூ கலர் விருப்பமும் உள்ளது.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளின் (ICICI Bank credit card and credit card EMI transactions) கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

கூடவே "தகுதியான" பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் (Exchange) செய்தால் மேலும் ரூ.2000 டிஸ்கவுன்ட் கிடைக்கும். அதாவது உங்களுக்கு மொத்தம் ரூ.4000 நேரடி தள்ளுபடி கிடைக்கும். இதன்கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் இறுதி விலையை ரூ.18,999 க்கும், 12ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.20,999 க்கும் கொண்டுவர முடியும்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மையுஎக்ஸ் (MyUX) கொண்டு இயங்கும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் பிஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 சிப்செட் (Qualcomm 4nm Snapdragon 7s Gen2 Chipset) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது சோனி LYT-700C சென்சார் மற்றும் எப்/1.88 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவை (எப்/2.2 அபெர்க்ஷர் - இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும்) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது இணக்கமான டர்போபவர் சார்ஜிங் ப்ரிக்கை பயன்படுத்தி 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங், 5ஜி, 4ஜே, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Heavy Demand For Motorola Edge 50 Fusion in Flipkart Check Next Sale Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X