Home
Mobile

OnePlus-காக ஸ்பெஷலா செஞ்ச ஆப்பு.. அதுவும் கம்மி விலையில.. iQOO-வை சாதாரணமா எடை போட்டோம்!

ஐக்யூ (iQOO) நிறுவனத்தை கொஞ்சம் சாதாரணமாக எடைபோட்டு விட்டோமோ என்று ஒன்பிளஸ் (OnePlus), ரெட்மி (Redmi), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களை நினைக்க வைக்கும்படியான ஒரு "மாஸ்" ஆன ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 21 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நாம் இங்கே பேசுவது ஐக்யூ இஸட்7 5ஜி (iQOO Z7 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் (OnePlus Nord CE 2 Lite), ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro), ரெட்மி நோட் 12 (Redmi Note 12) போன்றவைகளுடன் நேரடியாக மோதும் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகவுள்ளது.

iQOO Z7 5G: மிட்-ரேன்ஜ் விலையில் OnePlus-காக ஸ்பெஷலா செஞ்ச ஆப்பு!

ஐக்யூ இஸட்7 5ஜி விலை: கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐக்யூ இஸட்7 5ஜி-யின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும். அது மட்டுமின்றி இது இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக மாடலாகவும் (India-exclusive model) இருக்கும். அதாவது மேற்குறிப்பிட்ட போன்களுக்கு போட்டியாக இருக்க வேண்டுமென்று ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது!

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ,18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல ரியல்மி 10 ப்ரோ 5ஜி போனும் கூட ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது, கடைசியாக உள்ள ரெட்மி நோட் 12 5ஜி மாடலானது ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆக எப்படி பார்த்தாலும், ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம், பெரும்பாலும் ரூ.18,999 ஆகவே இருக்கும் என்பதை மிகவும் எளிமையாக யூகிக்க முடிகிறது. குறிப்பாக இது மேற்குறிப்பிட்ட மூன்று 5ஜி போன்களுக்கும் போட்டியாக களமிறங்கும் பட்சத்தில் இதன் விலை ரூ.18,999 ஆக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஐக்யூ இஸட்6 5ஜி அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 920 (MediaTek Dimensity 920 SoC) சிப்செட் மூலம் இயங்குமென்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation) உடனான 64எம்பி ப்ரைமரி ரியர் கேமராவை பேக் செய்யும்.

ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனில் அமோஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் அளவு குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 7.8மிமீ என்கிற மிகவும் மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது என்பதையும் ஐக்யூ உறுதிபடுத்தியுள்ளது.

இது தவிர்த்து, எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்7 5ஜி-யின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் 64எம்பி ஓஐஎஸ் (OIS) கேமராவானது ஒரு அல்ட்ரா-ஸ்டேபிள் ப்ரைமரி கேமராவாக செயல்படும். மேலும் அது 2எம்பி மேக்ரோ கேமராவுடன் பேக் செய்யப்படும். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்.

ஐக்யூ இஸட்7 5ஜி ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள அமோஎல்இடி டிஸ்பிளேவானது 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை 5,000mAh பேட்டரியுடன் வரலாம் மற்றும் அது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆனது 25 நிமிடங்களில் 0 - 50% பேட்டரியை நிரப்பும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Heavy Competition to OnePlus Redmi Realme Mid Range Phones iQOO Z7 5G Price in India Under Rs 20000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X