Home
Mobile

புதிய 4ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஹுவெய்

By Super
புதிய 4ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஹுவெய்
புதிய 4ஜி மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது ஹுவெய் நிறுவனம். ஹுவெய் இம்பல்ஸ் 4ஜி என்ற பெயரில் வரும் இந்த போன் 125 கிராம் எடை மட்டுமே கொண்டது. இந்த மொபைல் டிஎப்டி திரையும் மற்றும் 480 X 800 பிக்ஸல் ரிசல்யூஷனும் வழங்கப்பட்டுள்ளது.

3.8 இஞ்ச் திரை மல்டி டச் வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பிராக்ஸிமிட்டி சென்சாரும் கொண்டது. சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 2.2 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் வர இருக்கிறது.

கேமரா வசதி என்பது ஒரு மொபைலில் மிகவும் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. இதில், லெட் ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமரா கொண்டுள்ளது. இதில், அப்லோடு செய்யப்பட்டுள்ள வைஃபை மூலம் மின்னல் வேகத்தில் நெட் வசதியினைப் பெற முடியும்.

இதில் 4ஜி உள்ளதால் 3ஜி மொபைலைவிடவும் வேகமும், பல சிறப்பு வசதிகளை பெற முடியும். 512 எம்பி மெமரி வசதியும் இதில் உள்ளது. 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ வசதியினைப் பெற இதில் மல்டி மீடியா ப்ளேயர் உள்ளது.

இது அனைத்து பார்மெட்களையும் சப்போர்ட் செய்யும். இந்த மொபைலை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது ஹுவெய். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் இதன் வசதியும், விலையும் நிச்சயம் இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X