2020 இல் தூள் கிளப்பிய ஸ்மார்ட்போன்கள் விற்பனை: ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வளர்ச்சி!
மற்ற ஆண்டுகளை போல் இந்த ஆண்டு அமையவில்லை என்றே கூறலாம். கொரோனா தாக்கம் உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது. பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஸ்மார்ட்போன்களும், அதில் புகுத்தப்படும் புதுவித அம்சங்களும் பஞ்சமில்லாமல் இருக்கும் வகையில் அமைந்தது.

2019 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை
2019 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 152.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகின. 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் மட்டும் விற்பனை விகிதம் 8 சதவீதம் அதிகமாகும். அதேபோல் 2020 ஆம் ஆண்டிலும் விற்பனை பஞ்சமில்லாமல் இருந்தது.

பல்வேறு பயன்பாட்டுக்கு பிரதான தேவையாக மாறிய ஸ்மார்ட்போன்கள்
2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட்போன்கள் சந்தை சற்று மந்தநிலையிலேயே இருந்தது என்றே கூறலாம். ஆனால் கொரோனா பூட்டுதல் காரணமாக ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை, பொழுதுபோக்கு தேவைக்கு என பல்வேறு பயன்பாட்டுக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருந்தது.

சூடுபிடிக்கத் தொடங்கிய விற்பனை
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை குறித்து சிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கலாம். அதில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனத்துக்கு தனி வரவேற்பு
பொதுவாக இந்தியாவில் சியோமி நிறுவன அறிமுகத்துக்கு என தனி வரவேற்பு இருக்கும். இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் சியோமிக்கு தனி பங்கு இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில்தான் சாம்சங் போன்ற நிறுவனங்கள் இருந்தன.

5 சதவீதம் வீழ்ச்சி
இந்த நிலையில் சிஎம்ஆர் ஜூலை - செப்டம்பர் காலாண்டு ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த அறிக்கையின்படி, சியோமி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 5 சதவீதம் வீழ்ச்சியை கண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தளங்கள் பண்டிகை தின விற்பனை
சாம்சங் நிறுவனத்தின் எம்01, ஏ21எஸ் மற்றும் எம்30எஸ் ஸ்மார்ட்போன்கள் மொத்தமாக 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிக்க காரணம் ஆன்லைன் விற்பனை தளங்கள் பண்டிகை தின விற்பனையை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்ததுமாகும்.

லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனை
அதுமட்டுமின்றி லடாக் எல்லையில் இந்தியா சீனா நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் மேலோங்கியது. சீன பொருட்கள் வாங்குவதை இந்தியர்கள் குறைக்கத் தொடங்கினர். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

புதுவித அம்சங்கள் மற்றும் டிசைன்கள்
இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தங்களது ஸ்மார்ட்போன்களை புதுவித அம்சங்கள் மற்றும் டிசைன்களோடு அறிமுகம் செய்தன. வருகிற நாட்களில் இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களுக்கு உள்நாட்டில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications