Home
Mobile

தங்கத்தில் மினு மினுக்கும் மொபைல்போன்: விலை ஜஸ்ட் ரூ.25 லட்சம்

By Super

 தங்கத்தில் மினு மினுக்கும் மொபைல்போன்: விலை ஜஸ்ட் ரூ.25 லட்சம்
ரூ.25 லட்சம் விலையில் 18 கேரட் தங்கத்தை கொண்டு முலாம் பூசப்பட்ட ஆடம்பர மொபைல்போன் கிரெஸ்ஸோ பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

விலையை கேட்டவுடன் புதிய வசதிகள் கொட்டிக்கிடக்கும் என்று தப்பு கணக்கு போட்டிவிட வேண்டாம். இதில், பூசப்பட்ட தங்க முலாமுக்குத்தான் இந்த கொள்ளை விலை. ஆனால், வசதிகளை எடுத்துக்கொண்டால் நம்மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் 3,000 ரூபாய் போனில் இருக்கும் அதே வசதிகள்தான் இருக்குமாம்.

இந்த போனில் 150 கிராம் எடைக்கு 18 கேரடன் தங்கத்தைக் கொண்டு முலாம் பூசியுள்ளனர். முன்பக்கம் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைத்துள்ளனர். மேலும், பட்டன்கள் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஜொலிக்கிறது.

பட்டன்கள் வட்ட வடிவிலும், திரைக்கு கீழே நேவிகேஷன் கீயும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கிரெஸ்ஸோ கிராண்ட் பிரிமியர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள் இந்த போனின் பெயரில்தான் ஆடம்பரம் தெரிகிறது. போனின் தோற்றம் மற்றும் வசதிகளில் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இந்த ஆடம்பர போன் லிமிடேட் எடிசன் மொபைல்போனாக விற்பனைக்கு வர இருக்கிறது. மொத்தமே 30 கிரெஸ்ஸோ கிராண்ட் பிரிமியர் போன்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த போன் விற்பனை செய்யப்படும் என்று கிரெஸ்ஸோ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X