புது OnePlus போனை வாங்கிட்டு கதறிய ஓனர்.. டிஸ்பிளேவில் Green Line சிக்கல்.. எந்த மாடல்? சரி செய்யப்பட்டதா?
சார்ஜ் போட்டுக்கொண்டிருந்த போது, கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஒருவருடைய தலைக்கு அருகே வெடித்த விவகாரத்தின் "புகையே" இன்னும் ஓயாத நிலையில்.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்று - க்ரீன் லைன் டிஸ்பிளே பிரச்சனையில் (Green Line Display Issue) சிக்கியுள்ளது.
அது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மினி ஸ்மார்ட்போன் (காம்பாக்ட் ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலாகும். கிஸ்மோசீனாவின் (Gizmochina) சமீபத்திய அறிக்கையின்படி, ரெடிட் (Reddit) தளத்தில் பயனர் ஒருவர், கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் லைன் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

டிஸ்பிளேவுடன் தொடர்புடைய இந்த க்ரீன் லைன் சிக்கல் ஆனது ஃபிளாக்ஷிப் முதல் மிட்-ரேஞ்ச் மாடல்கள் வரையிலாக ஏற்கனவே பல பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை பாதித்துள்ளது. இப்போது மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் ஏற்பட்டு.. "இதுக்கு ஒரு END-ஏ கிடையாதா?" என்கிற கேள்வியை தூண்டிவிட்டுள்ளது.
ரெடிட் தளத்தில் தனது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் படத்தை பகிர்ந்த ஒரு பயனர், அதை வாங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு அதன் டிஸ்பிளேவில் க்ரீன் லைன் தோன்றியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போன்அரேனாவிற்கு (Phone Arena) கொடுத்த விளக்கத்தில், ஒன்பிளஸ் நிறுவனமானது இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு, இது பயனருடன் நேரடியாக தொடர்புகொண்டு முழுமையாக தீர்க்கப்பட்டது என்று கூறியுள்ளது
மேலும் பாதிக்கப்பட்ட பயனர் அவருடைய ரெடிட் போஸ்ட்-ஐ நீக்கிவிட்டார். மேலும் இதுவரை ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் பதிவுசெய்யப்பட்ட ஒரே க்ரீன் லைன் சிக்கல் இதுவாகும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கூடுதலாக கிரீன் லைன் சிக்கல்களுக்கு எதிராக வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்குவதில் ஒன்பிளஸ் நிறுவனம் முதன்மையானதாக இருக்கிறது என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறியாதோர்களுக்கு, கிரீன் லைன் சிக்கல்களுக்கு எதிராக ஒன்பிளஸ் நிறுவனம் வாழ்நாள் உத்தரவாதத்தை வழங்குகிறது. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட க்ரீன் லைன் சிக்கலை உடனே சரிசெய்து விட்டாலும் கூட, மேலும் ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, அறிமுகம் செய்யப்பட்டு 2 மாதங்கள் கூட முழுதாக முடிவடையாத ஒரு ஸ்மார்ட்போன், இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த சிக்கலை எதிர்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications








