Home
Mobile

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வ்யை2, மி ஏ2, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

இதேபோல் சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 49-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 55-இன்ச் மி எல்இடி டிவி 4 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.47,999-விலை

தற்சமயம் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வ்யை2, மி ஏ2 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் மார்ச் 7-ம் தேதி வரை இருக்கும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, மி ஏ2, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

விலைகுறைக்கப்பட்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வ்யை2, மி ஏ2 ஸ்மார்ட்போன்களை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட இந்த கருவியை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ சாதனத்தை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, மி ஏ2, ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

சியோமி ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட இந்த
ஸ்மார்ட்போனை ரூ.7,999 விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தை ரூ.11,999-விலையில் வாங்க முடியம்.

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். பின்பு 6ஜிபி ரேம் கொண்ட மி ஏ2 சாதனத்தை ரூ.14,999
விலையில் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 5.99' இன்ச் உடன் கூடிய 2160x1080 பிக்சல் கொண்ட புல் எச்.டி. பிளஸ் 18:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் உடன் கூடிய MIUI 9 இயங்குதளம்
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
- 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ
- வைபை
- ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி வ்யை2 சிறப்பம்சங்கள்:

சியோமி ரெட்மி வ்யை2 சிறப்பம்சங்கள்:

ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன். இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ
யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி ஏ2 சிறப்பம்சங்கள்::

சியோமி மி ஏ2 சிறப்பம்சங்கள்::

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி மி ஏ2 சாதனம் வெளிவரும்.

சியோமி மி எல்இடி டிவி

சியோமி மி எல்இடி டிவி

இதேபோல் சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 49-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 55-இன்ச் மி எல்இடி டிவி 4 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.47,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Grab Xiaomi Redmi Note 5 Pro, Redmi Y2 and more with up to Rs 2,000 discount: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X