Home
Mobile

ஹானர் 9என் பிளாஷ் சேல்: ரூ.1 க்கு வாங்குவது எப்படி?

ஹானர் நிறுவனத்தின் பிளாஷ் சேல் விற்பனை துவங்கவுள்ளது. அடுத்து நடக்க இருக்கும் பிளாஷ் சேல் விற்பனையில் தனது புதிய ஹானர் 9என் மாடல் ஸ்மார்ட்போன் இன் விற்பனையைத் துவங்குகிறது ஹானர் நிறுவனம்.

By Sharath

ஹானர் நிறுவனத்தின் பிளாஷ் சேல் விற்பனை துவங்கவுள்ளது. அடுத்து நடக்க இருக்கும் பிளாஷ் சேல் விற்பனையில் தனது புதிய ஹானர் 9என் மாடல் ஸ்மார்ட்போன் இன் விற்பனையைத் துவங்குகிறது ஹானர் நிறுவனம்.

ஹானர் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு சில பிரத்தியேக சலுகைகளை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவித்து வருகின்றது. அந்த வரிசையில் தனது புது வரவான ஹானர் 7எஸ், ஹானர் 9என் மற்றும் ஹானர் பிளே அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஹானர் வலைத்தளத்தில் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.1 க்கு கிடைக்கும் ஹானர் 9என்

ரூ.1 க்கு கிடைக்கும் ஹானர் 9என்

சீனா நிறுவனமான ஹானர் நிறுவனம், ஹானர் 9என் ஸ்மார்ட்போன் ஐ வெறும் ரூ.1 க்கு கிடைக்குமென்று அறிவித்திருக்கிறது. இந்த விற்பனை குறைந்த ஸ்டாக்களுக்கு மட்டுமே என்றும் நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது.

 ஹானர் 9என் பெறுவதற்காண வழிமுறை

ஹானர் 9என் பெறுவதற்காண வழிமுறை

செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 11:45 மணிக்குப் பிரத்தியேக ஹானர் 9என் ரூ.1 க்கான விற்பனை www.hihonor.in ஹானர் வலைத்தளத்தில் துவங்குகிறது. இந்தச் சலுகை விலையில் ஹானர் 9என் ஐ பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களின் தனிநபர் விபரம், ஈமெயில் ஐடி, மொபைல் எண் மற்றும் பண பரிவர்த்தனை விபரங்களை மட்டும் பதிவுக்கு செய்தால் போதும் . முக்கிய குறிப்பு உங்களின் பண பரிவர்த்தனை கண்டுய்ப்ப ஆன்லைன் பரிவர்த்தனையாக இருப்பது அவசியம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர் என்றால், உங்களுக்கு வெறும் ரூ.1 க்கு சிறப்பான ஹானர் 9என் ஸ்மார்ட்போன் வழங்கப்படும்.

சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

இதுமட்டுமின்றி ஹானர் இன் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஹானர் பிளே ஸ்மார்ட்போன்-ற்கு ரூ.2000 வரை சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொபிக்விக்(Mobikwik) செயலி மூலம் செய்யும் அனைத்து பண பரிவர்த்தனைக்கு 15% சலுகை மற்றும் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஹானர் 7எஸ் மற்றும் ஹானர் 9என் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டேட்டா சலுகையுடன் ஹானர் 9என்

டேட்டா சலுகையுடன் ஹானர் 9என்

இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ் பேக் சலுகையுடன் 100ஜிபி, 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வோடோபோன் ரேச்சர்ஜ் பிளான் ரூ.399 அல்லது அதற்கு மேல் உள்ள பிளான்களுடன் வாடிக்கையாளர் வாங்கும் அனைத்து ஹானர் 9என் ஸ்மார்ட்போன்னுடன் பயனருக்கு 120ஜிபி டேட்டா 12 மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

ஹானர் 9 என் இன் விபரக்குறிப்பு:

ஹானர் 9 என் இன் விபரக்குறிப்பு:

- 5.84 இன்ச் எல்சிடி எஃப்எச்டி+, 2280 x 1080 பிக்சல் நோட்ச் டிஸ்பிலே
- 3/4 ஜிபி ரேம் மற்றும் 32/64/128 உள் சேமிப்பு
- 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டிஸ்ப்ளே அளவு: 5.84 இன்ச்
- 13மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின் கேமரா
- 16 மெகா பிக்சல் முன் கேமரா
- 3,000 எம்ஏஎச் பேட்டரி

இத்துடன் வைஃபை, ப்ளூடூத்,பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் எனப் பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Grab Honor 9N 3GB+32GB Variant for Just Re.1 at Honor Store Flash Sale; Here’s How to Avail the Offer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X