ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி அறிய 'கோப்ரோபோ' புதிய உதயம்!

கோப்ரோபோ என்ற புதிய வலைத்தளம் இங்கே ஸ்மார்ட்போன் பற்றி தேவையான தகவல்களை அளிக்கிறது. இதில் என்ன ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அது மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன் திரை, கேமரா மற்றும் இயங்குதளம் ஆகிய வசதிகளை நாமே தேர்வு செய்து கொள்ள
வேண்டும். இப்படி தேர்வு செய்து கொண்டு, அதன் பின் ஃபைன்டு என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும். நாம் கொடுத்த திரை, கேமரா மற்றும் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கண் இமைக்கும் நொடிக்குள் தேடி கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த கோப்ரோபோவின் முக்கிய வசதி என்னவென்றால், இதில் விலையினையும் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக விலையினை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு தனியாக நேரம் செலவிட்டு தேட வேண்டியிருக்கும். ஆனால் இந்த கோப்ரோபோவில் திரை அளவு, கேமரா பிக்ஸல் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் போது விலையினையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
எந்த விலையில் இருந்து எவ்வளவு விலை வரையில் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த விலையினை கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு நாம் என்ன மாதிரியான் ஸ்மார்ட்போன் விவரங்களை அதில் கொடுத்து ஃபைன்டு என்ற பட்டனை க்ளிக் செய்தோமோ, அந்த தொழில் நுட்பங்கள் கொண்ட
ஸ்மார்ட்போன் வரிசையாக காட்டப்பட்டும்.
இதனால் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் விவரத்தினையும் தேடி நேரத்தினை வீணாக்க வேண்டாம். கோப்ரோபோ வலைத்தளத்திற்கு சென்று எளிதாக ஸ்மார்ட்போன் தகவல்களை பெற முடியும்.


Click it and Unblock the Notifications