ஆப்பிளுக்கு அதிர்ச்சி; இந்தியர்களுக்கு குஷி; கூகுள் சொன்ன குட் நியூஸ்.!

இருப்பினும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கோகுல் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை.

|

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் இதயங்களை ஒருமனதாக வென்றுள்ளன.

ஆப்பிளுக்கு அதிர்ச்சி; இந்தியர்களுக்கு குஷி; கூகுள் சொன்ன குட் நியூஸ்.

இருப்பினும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கோகுல் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை. ஆப்பிள் ஐபோன்களை போன்றே ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களாகவே கூகுள் பிக்சல் திகழ்கின்றன. அதனை மனதில் கொண்டு தான் - கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்கான ஒரு "குட் நியூஸை" அறிவித்துள்ளது.

பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.!

பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.!

அதாவது, இந்தியா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. கூகுள் பிக்சல் வரிசையை விரிவாக்குவதற்கும், இந்திய சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

தீபாவளி திருவிழாவின் போது.!

தீபாவளி திருவிழாவின் போது.!

அதாவது, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 எக்ஸ்எல் எனும் பெயரிடப்பட்ட அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தீபாவளி திருவிழாவின் போது இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் (முன்னர் வெளியான பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகியவற்றை போலவே) கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நமது கைகளுக்கு வரும்.

ஜூலை மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில்.!?

ஜூலை மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில்.!?

இருப்பினும் மலிவு விலை நிர்ணயத்தில் எந்த கூகுள் ஸ்மார்ட்போன் வெளியாகும் மற்றும் அதன் விலை இலக்கு என்னவாக இருக்கும் போன்ற விவரங்களை வெளியானஅறிக்கை விவரிக்கவில்லை, அது பற்றிய தெளிவும் இல்லை. ஆனால், வருகிற ஜூலை மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள், சாம்சங் மற்றும் அமேசான்.!

ஆப்பிள், சாம்சங் மற்றும் அமேசான்.!

இதில் இருந்து, இந்திய சந்தையில் ஆப்பிள், சாம்சங் மற்றும் அமேசான் போன்ற ஒரு பெரிய நுகர்வோர் மின்னணு பிராண்டாக உருமாறுவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும் கூட, தனது அசல் உபகரண உற்பத்தியாளர்களான சியோமி, ஒன்ப்ளஸ் மற்றும் க்ளோபல் எச்எம்டி போன்ற நிறுவனங்களின் சந்தையை பாதிக்காமல் பணியாற்றும் என்பதும் வெளிப்படை.!

Best Mobiles in India

English summary
Google working on a mid-range Pixel smartphone for India: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X