நீ பொட்டு வச்ச தங்கக்குடம்.. iPhone-களுக்கும் வேட்டு.. Google-ன் மாஸ்டர் பிளான்.. அடேங்கப்பா Pixel 10 சீரீஸ்!
சமீபத்தில் அறிமுகமான பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கும்போதே.. கூகுள் (Google) நிறுவனம் ஆனது அதன் ஸ்மார்ட்போன் பிஸ்னஸ்-ஐ சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள தொடங்கி உள்ளதையும், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் (iPhone) மாடல்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கிற அதன் முனைப்பையும் "அப்பட்டமாக" புரிந்துகொள்ள முடிந்தது.
பிக்சல் 9ஏ மாடல் எல்லாம் "சும்மா டிரெய்லர் தான்" என்று கூறும்படியாக பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சங்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. பிக்சல் 10 சீரீஸ் என்னென்ன கேமரா சென்சார்களை பேக் செய்யும்? எப்போது அறிமுகமாகும்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறலாம்? இதோ விவரங்கள்:

2 மாடல்களில் மாற்றங்கள் இல்லை: ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, விலை உயர்ந்த மாடல்கள் ஆன பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro) மற்றும் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) ஆகிய இரண்டும் அதன் முன்னோடிகளை போலவே (அதாவது பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடல்களில் உள்ள) அதே கேமராக்களை தக்கவைத்துக் கொள்ளும்.
2 மாடல்களில் முக்கிய மாற்றம்: பிக்சல் 10 சீரிஸின் 2 ப்ரோ மாடல்களில் மாற்றங்கள் இல்லை. ஆனால் "வெண்ணிலா வேரியண்ட்" ஆன பிக்சல் 10 (Pixel 10) ஸ்மார்ட்போன் ஆனது முழுமையான மாற்றத்தை பெறும். கூடவே பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) ஸ்மார்ட்போனிலும் ஒரு சிறிய அப்கிரேட் இருக்கும்.

பிக்சல் 10 மாடல் அப்படி என்ன முக்கிய மாற்றம்? வெண்ணிலா பிக்சல் 10ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பிரத்யேக டெலிஃபோட்டோ கேமராவை பெறுகிறது, இருப்பினும் சரியான குவிய நீளம் (Focal Length) குறித்த விவரங்கள் இல்லை . இது 11எம்பி 1/3.0" சாம்சங் ஜெஜெ1 சென்சாரை பயன்படுத்தலாம். இது பிக்சல் 10 சீரீஸில் உள்ள 2 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்படும் 1/2.55" சென்சாரை விட கணிசமாக சிறியது.
இதில் துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயமும் உள்ளது! அது என்னது? டெலிஃபோட்டோ கேமராவின் இணைப்பானது உற்பத்தி செலவை உயர்த்தியிருக்கலாம். எனவே அதை ஈடுசெய்ய, கூகுள் நிறுவனம் ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களை "தரமற்ற" அல்லது "கணிசமாக சிறிய சென்சார்கள்" கொண்டு மாற்றி அமைக்கலாம்.
இது கூகுளின் மாஸ்டர் பிளான்: பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் பிக்சல் 9 உள்ள சாம்சங் GNV, 1/1.31" சென்சார் ஆனது சாம்சங் GN8, 1/1.95" ஆக மாற்றப்படலாம். கூடவே அல்ட்ராவைடு 48எம்பி சோனி IMX858 1/2.55" சென்சார் ஆனது 13எம்பி சோனி IMX712, 1/3.1" கொண்டு மாற்றப்படலாம். உண்மையை சொல்லப் போனால், இது விற்பனையை அதிகரிப்பதற்கான, கூகுளின் ஒரு வியாபார தந்திரமாக தெரிகிறது.

பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்: இது ஒரு புதிய ப்ரைமரி கேமராவை பெறும். இது 64எம்பி சோனி IMX787 இலிருந்து 50எம்பி சாம்சங் GN8 ஆக மாறலாம். நினைவூட்டும் வண்ணம் இதே சென்சார் தான் பிக்சல் 9ஏ மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட விவரங்களில் எதெல்லாம் உண்மையாகும், எதெல்லாம் வெறும் லீக்ஸ் தகவல்களாகவே என்பது பிக்சல் 10 சீரீஸின் வெளியீட்டில் தெரிய வரும்.
கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரீஸ்-ஐ எப்போது அறிமுகம் செய்யும் (Pixel 10 Series Launch Timeline)? பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 10 ப்ரோ போல்ட் 4 ஆகிய மாடல்களை உள்ளடக்கிய பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும் (Pixel 10 Series Expected Pricing Details)? நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 9 இந்தியாவில் ரூ.79,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் பிக்சல் 8 மாடல் ஆனத ரூ.75,999 இல் தொடங்கியது. ஆக பிக்சல் 10 மாடல் ஆனது பிக்சல் 9 மாடலை போலவே அல்லது அதைவிட ரூ.4,000 வித்தியாசத்தில், அதாவது ரூ.83,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இதேபோல பிக்சல் 8 ப்ரோ சுமார் ரூ.1,06,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ சுமார் ரூ.1,09,999 க்கும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக பிக்சல் 10 ப்ரோவின் விலை சுமார் ரூ.1,12,999 ஆக இருக்கலாம். இதேபோல முன்னதாக வெளியான மாடல்களின் விலை நிர்ணய போக்குகளை கருத்தில் கொண்டு, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் விலை சுமார் ரூ.1,27,999 ஆகவும், பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் மாடலின் விலை சுமார் ரூ.1,75,999 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10 ப்ரோ போல்ட்டின் டிசைன்: டிப்ஸ்டர் ஒன்லீக்ஸ் உடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்ட ரெண்டர்களின்படி, இது கிரீம் கலர் ஆப்ஷனில் ஒரு பழக்கமான டிசைன் லேங்குவேஜை சித்தரிக்கின்றன. இது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் நாம் கண்டதை போலவே செவ்வக கேமரா யூனிட்டை இடம்பெறும் என்பது போல் தெரிகிறது
மேலும் கேமரா லென்ஸ்கள் டூயல்-ஸ்டேஜ் வடிவமைப்பில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டின் 48 மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிக்சல் 10 ப்ரோ போல்ட்டின் டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போனில் அவுட்டர் டிஸ்ப்ளேவில் ஒரு ஹோல் பஞ்ச் கட்அவுட் இருப்பது போல் தெரிகிறது. டிஸ்பிளேவில் உள்ள பெசல்கள் தடிமனாகவும் தெரிகிறது.இன்னர் ஸ்க்ரீனில் வலது மூலையிலும் ஒரு ஹோல் பஞ்ச் கட்அவுட் உள்ளது. ஆக பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டை விட சற்று தடிமனாக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது
பிக்சல் 10 ப்ரோ போல்ட்டில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் டென்சர் ஜி5 சிப் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டி900 மோடம்-ஐ கொண்டிருக்கலாம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடும்.


Click it and Unblock the Notifications