இதோ வந்துட்டேன்.. தேதி குறித்த Google.. Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, Pixel 11 Pro Fold அறிமுகம்!
பிக்சல் 11 (Pixel 11) சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்விற்கான அழைப்பிதழ்களை கூகுள் (Google) அனுப்ப தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிடும் மார்க் குர்மேன் (Mark Gurman) பகிர்ந்துள்ள அழைப்பிதழின்படி, "நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிக்சல்"-ஐ அறிமுகப்படுத்த, கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 12 அன்று நியூயார்க்கில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
கூகுளின் இந்த அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி (IST) ஆகஸ்ட் 13 அன்று அதிகாலை 3:30 மணிக்கு நடைபெறும். அதாவது நீங்கள் இந்தியாவில் இருந்தால், ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலையில் எழுந்திருக்கும்போது, கூகுள் பிக்சல் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் ரெடியாக இருக்கும்.

பிக்சல் 11 சீரீஸின் கீழ் பிக்சல் 11 (Pixel 11), பிக்சல் 11 ப்ரோ (Pixel 11 Pro), பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 11 Pro XL) மற்றும் பிக்சல் 11 ப்ரோ போல்ட் (Pixel 11 Pro Fold) ஆகிய 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
குறிப்பாக கூகுளின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது, அதாவது பிக்சல் 11 ப்ரோ போல்ட் மாடல் ஆனது, அந்நிறுவனத்தின் இதுவரை இல்லாத மிக மெல்லிய போல்டபிள் போனாக இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola) மற்றும் விவோ (Vivo) போன்ற நிறுவனங்களின் போல்டபிள் போன்களுடன் இது சிறப்பாக போட்டியிட உதவும்.
இதுதவிர்த்து நான்கு புதிய பிக்சல் 11 சீரீஸ் மாடல்களிலும் டென்சார் ஜி6 (Tensor G6) சிப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 அறிமுக தேதியை நாம் நெருங்கும்போது மற்ற விவரக்குறிப்புகள் இன்னும் தெளிவாக தெரியவரும். இந்த ஸ்மார்ட்போன்களில் ஏஐ (AI) ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
விலை விவரத்தை பொறுத்தவரை, மெமரி சிப் பற்றாக்குறை காரணமாக பிக்சல் 11 சீரீஸின் விலை அதன் முந்தைய மாடலை விட சற்று அதிகமாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 10 ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.79,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் ஒரு பிக்சல் ரசிகராக இருந்து, புதிய பிக்சல் போனுக்கு மாற விரும்பினால், இன்னும் தெளிவான முடிவை எடுப்பதற்காக பிக்சல் 11 குறித்த மேலதிக அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்பது நல்லது.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம் (Material You Expressive design system)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி. யுஎஸ்பி டைப்-சி.


Click it and Unblock the Notifications