ரெடியாக இருங்க.! மிட்ரேன்ஜ் விலையில் கூகுள் பிக்சல்; எப்போது வெளியாகும்.?
நம்பகமான லீக்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட், கூகுள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ஒரு இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.
நம்பகமான லீக்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட், கூகுள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ஒரு இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். உடன் அந்த பிக்சல் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்.? எப்போது வெளியாகலாம்.? என்கிற விவரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் நிறுவனத்தின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயங்கும் என்பது தான் ஹைலைட். வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்.?

தீபாவளி திருவிழாவின் போதும்.!
ரோலண்ட் குவாண்ட்டால் வெளியிடப்பட்ட ட்வீட்டின் கூற்றுப்படி, கூகுள் தற்போது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையிலான ஒரு இடைப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் ஆகலாம், அதாவது 2019 முதல் பாதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், அடுத்த ஆண்டு தான் நிச்சயமாக வெளியாகும் என்று கூற முடியாது, வருகிற தீபாவளி திருவிழாவின் போது வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 710 மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் எது.?
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் பற்றிய பெரிய விளக்கங்கள் தேவையில்லை. க்வால்காம் நிறுவனத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மற்றும் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 710 மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் மி8 எஸ்இ ஆகும். ஒரு 10nm செயல்முறையில் தயாரிக்கப்பட்ட, ஸ்னாப்ட்ராகன் 710 க்வால்காம் ஆனது கஸ்டம் க்ரியோ 360 CPU-வை பயன்படுத்துகிறது.

பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு கொண்டிருக்கும்.!
மேலும் ஸ்னாப்டிராகன் 710 ஆனது ஒரு அட்ரெனோ 616 ஜிபியூ, ஸ்பெக்ட்ரா 250 ISP, பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு, மற்றும் ஒரு X15 LTE மோடம் ஆகியவைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் இந்த திறன்கள் எல்லாம் வெளியாகப்போகும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனில் இடம்பெறும்.

வதந்திக்கப்படும் அம்சங்கள்.!
துரதிருஷ்டவசமாக, இந்த இடைப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான விவரக்குறிப்புகள் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் லீக்ஸ் தகவல்களில் சிக்கி வருவதால் சில எதிர்பார்க்கப்படும் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, வெளியாகும் இந்த மிட்-ரேன்ஜ் கூகுள் பிக்சல் ஆனது, தற்போதைய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் ஆனால், நிச்சயமாக மலிவானதாக இருக்கும்.


ஆப்லைன்
விலை குறைவாக இருக்கும் என்கிற பட்சத்தில், வருகிற நாட்களில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் நிறுவனம் அதன் சாதகமான மற்றும் சாத்தியமான வளர்ச்சியை அடையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னரே, இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் அதன் ஆப்லைன் ஸ்டோர்களை அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications